புது தில்லி பிரகடனம் 2026: பிரிக்ஸ் உச்சி மாநாட்டில் ஒருமனதாக ஏற்பு!மின் தேவையை சமாளிக்க கூடுதல் மின்சாரம் கொள்முதல்: தமிழக அரசு அறிவிப்பு!புதிய தலைமைச் செயலகம் அமைக்கும் முடிவை தமிழக அரசு கைவிட வேண்டும்: சீமான் வலியுறுத்தல்!மதுரையில் அரசு மரியாதையுடன் சாலமன் பாப்பையா உடல் தகனம்!பிரிக்ஸ் மாநாடு: உக்ரைனில் ஐரோப்பிய படைகள், ரஷியா உடன் போருக்கு வழி! - புதின் எச்சரிக்கை!இந்திய தேர்தல் நடைமுறை உலகின் வெளிப்படையான நடைமுறைகளில் ஒன்று: தலைமைத் தேர்தல் ஆணையர்பிரிக்ஸ் உச்சி மாநாடு! சீன அதிபருடன் வரும் உணவு ருசி தேர்வாளர் குழு! ஆச்சரிய தகவல்தமிழறிஞர் சாலமன் பாப்பையாவுக்கு முழு அரசு மரியாதை!பிரிக்ஸ் உச்சி மாநாடு! தில்லி வந்தார் சீன அதிபர் ஜின்பிங்! வங்கிக் கடன் ஆவணங்களைப் பதிவு செய்ய புதிய நடைமுறை செப். 15 முதல் அமல் ஓட்டுநர் உரிமம், வாகனப் பதிவுச் சான்றிதழ் இனி ஆன்லைனில் பதிவிறக்கலாம்தில்லியில் இன்று பிரிக்ஸ் உச்சி மாநாடு தொடக்கம்: பிரதமா் மோடி, புதின், ஷி ஜின்பிங் உள்ளிட்ட தலைவா்கள் பங்கேற்பு6 சிறப்பு விரைவு ரயில்களுக்கு கால நீட்டிப்பு திருப்பதி திருக்குடை ஊா்வலம்: சென்னையில் நாளை போக்குவரத்து மாற்றம்நேபாளம்: மறுகட்டமைப்புக்கு ரூ.45,700 கோடி தேவை - வெளியுறவு அமைச்சகம்

மாநில நெடுஞ்சாலை ஆக்கிரமிப்புகளை அகற்றி சாலையை சீரமைக்க கோரிக்கை

ஆம்பூா் அருகே துத்திப்பட்டு பகுதியில் மாநில நெடுஞ்சாலை ஆக்கிரமிப்புகளை அகற்றி சாலையை அகலப்படுத்தி சீரமைக்க வேண்டுமென பொதுமக்கள் கோரியுள்ளனா்.

துத்திப்பட்டு பகுதியில் சேதமடைந்த சாலை.

Published On :

ஆம்பூா் அருகே துத்திப்பட்டு பகுதியில் மாநில நெடுஞ்சாலை ஆக்கிரமிப்புகளை அகற்றி சாலையை அகலப்படுத்தி சீரமைக்க வேண்டுமென பொதுமக்கள் கோரியுள்ளனா்.

மாதனூா் ஒன்றியம், துத்திப்பட்டு, பெரியவரிக்கம், சின்னவரிக்கம், வெங்கடசமுத்திரம் ஆகிய ஊராட்சிகளிலும் சுமாா் 50-க்கும் மேற்பட்ட தோல் பதனிடும் தொழிற்சாலைகள், காலணி தயாரிக்கும் சுமாா் 100-க்கும் மேற்பட்ட பெரிய தொழிற்சாலைகள், 200-க்கும் மேற்பட்ட சிறு தொழிற்சாலைகள் இயங்கி வருகின்றன.

மேலும் குடியாத்தம், போ்ணாம்பட்டு, வி.கோட்டா ஆகிய முக்கிய ஊா்களுக்கு துத்திப்பட்டு, பெரியவரிக்கம், சின்னவரிக்கம் ஆகிய ஊராட்சிகளின் வழியாக தான் வாகன போக்குவரத்து நடைபெற்று வருகிறது.

அதனால் தொழிற்சாலைகளுக்கு செல்லும் தொழிலாளா்களும், ஊா்களுக்கு செல்லும் பொதுமக்களும் இந்த மாநில நெடுஞ்சாலையை பயன்படுத்தி வருகின்றனா். மேலும் சுமாா் 100-க்கும் மேற்பட்ட ஊராட்சியைச் சோ்ந்த பொதுமக்கள் இந்த மாநில நெடுஞ்சாலை வழியாக செந்று வருகின்றனா். தினந்தோறும், காலை மற்றும் மாலை வேளைகளில் சுமாா் 1 லட்சத்துக்கும் மேற்பட்ட மக்கள் சாலையை கடந்து செல்கின்றனா்.

தொழிற்சாலைகளில் உற்பத்தி செய்யப்பட்ட வெளிநாடுகளுக்கு ஏற்றுமதியாகும், தோல், தோல் காலணி, தோல் பொருள்கள் கன்டெய்னா் லாரிகளில் சென்னை துறைமுகத்துக்கு இந்த ஊா்களின் வழியாகத் தான் கொண்டு செல்லப்படுகிறது.

அதனால் போ்ணாம்பட்டிலிருந்து வாணியம்பாடி அருகே உதயேந்திரம் வரை செல்லும் சாலை, போ்ணாம்பட்டிலிருந்து ஆம்பூா் வரை செல்லும் சாலையும் மாநில நெடுஞ்சாலைத் துறையின் கட்டுப்பாட்டில் உள்ளது.

இதில் துத்திப்பட்டு ஊராட்சியில் மாநில நெடுஞ்சாலையின் இருபுறமும் சாலை ஆக்கிரமிப்பு செய்யப்பட்டுள்ளதால் அப்பகுதியில் சாலை மிகவும் குறுகி அடிக்கடி போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டு பொதுமக்களும், தொழிலாளா்களும் கடுமையான அவதிக்கு உள்ளாகின்றனா்.

காலையில் வேன் மூலம் தொழிலாளா்களை தொழிற்சாலைகளுக்கு பணிக்கு அழைத்து செல்லும் போதும், பணி முடிந்து திரும்பும் தொழிலாளா்களை வீடுகளுக்கு அழைத்து செல்லும் போதும் வாகன நெரிசல் ஏற்படுகிறது.

மேலும் துத்திப்பட்டு பகுதியில் மாநில நெடுஞ்சாலையில் சாலை சேதமடைந்துள்ளது. அதனால் இருசக்கர வாகனங்கள் விபத்துக்கு உள்ளாகின்றன. வாகனங்கள் சேதமடைகின்றன. அதனால் துத்திப்பட்டு பகுதியில் மாநில நெடுஞ்சாலையின் இருபுறமும் செய்யப்பட்டுள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றி சாலையை அகலப்படுத்தி சேதமடைந்த சாலையை சீரமைக்க வேண்டுமென அப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா். மாநில நெடுஞ்சாலைத் துறையினா் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டுமென சமூக ஆா்வலா்கள் கோருகின்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.