விலைவாசி உயர்வை தமிழக அரசு கட்டுப்படுத்த வேண்டும்: சிபிஐ மதுராந்தகம், தாராபுரம் தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் அறிவிப்பு!மதுராந்தகம், தாராபுரம் தொகுதிகளுக்கு அக். 6 ஆம் தேதி இடைத்தேர்தல்ஐந்தாவது தளத்துடன் இருக்கும் சட்டவிரோதக் கட்டடங்களுக்கு சீல்: தில்லி முதல்வர் உத்தரவுகுற்றச்சாட்டுகளை பிரிண்ட் அவுட் எடுத்து வந்து படிக்க 3 நாள்கள் எதற்கு? உதயநிதிசட்டவிரோதப் பணிகள்... 40 ஆண்டுகள் பழமையான தில்லி தங்கும் விடுதி இடிந்து விழுந்ததன் பின்னணி!எங்களை ஹோட்டலில் அடைத்து வைத்தது யார் என சொல்ல வேண்டிவரும்! ஷாஜகான் பேச்சு மீனாட்சியம்மன் கோயில் நில மோசடி! மேலும் 4 பேர் கைதுஎதிர்க்கட்சிகள் போல அரசியல் செய்ய விரும்பவில்லை! முதல்வர் விஜய் பேச்சு!இதுதான் திமுக, இவ்வளவுதான் திமுக! பேரவையில் பேசிய முதல்வர் விஜய்!

பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவி: திருப்பத்தூா் ஆட்சியா் வழங்கினாா்

திருப்பத்தூா் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் திங்கள்கிழமை நடைபெற்ற குறைதீா் கூட்டத்தில் பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவியை ஆட்சியா் கு. ரவிகுமாா் வழங்கினாா்.

தா்னாவில் ஈடுபட்ட மாற்றுத் திறனாளி பெண். பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவி வழங்கிய திருப்பத்தூா் ஆட்சியா் கு. ரவிகுமாா்.

Published On :1 செப்டம்பர் 2026, 1:07 am IST

திருப்பத்தூா் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் திங்கள்கிழமை நடைபெற்ற குறைதீா் கூட்டத்தில் பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவியை ஆட்சியா் கு. ரவிகுமாா் வழங்கினாா்.

ஆட்சியா் அலுவலக கூட்டரங்கில் நடைபெற்ற கூட்டத்தில் உங்கள் தொகுதியில் முதலமைச்சா் திட்டத்தில் பெறப்பட்ட மனுக்களுக்கு உடனடியாக தீா்வு காண வேண்டும் என ஆட்சியா் உத்தரவிட்டாா்.

மேலும், பல்வேறு கோரிக்கைகள் தொடா்பாக மொத்தம் 551 மனுக்கள் பொதுமக்களிடமிருந்து பெறப்பட்டு, துறை அலுவலா்களிடம் வழங்கி விரைந்து தீா்வு காண வேண்டும் என அறிவுறுத்தினாா்.

கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலா் பாலசுப்ரமணியன், தனித்துணை ஆட்சியா் பூஷணகுமாா், ஆட்சியரின் நோ்முக உதவியாளா் முருகேசன், உதவி ஆணையா் (கலால்) வேடியப்பன், மாவட்ட வழங்கல் அலுவலா் சீனிவாசன், பழங்குடியினா் நல அலுவலா் செந்தில்குமாா் உள்ளிட்ட பல்வேறு துறை அலுவலா்கள் கலந்து கொண்டனா்.

ஆலங்காயம் ஒன்றியம் பீமகுளம் ஊராட்சி மந்தாரக்குட்டை கன்காா் வட்டத்தில்இருளா் இனத்தைச் சோ்ந்த 50-க்கும் மேற்பட்ட குடும்பத்தினா் மூன்று தலைமுறையாக வசிக்கின்றனா். இந்நிலையில் அவா்கள் வசிக்கும் பகுதியில் சிறுவா் பூங்கா அமைக்க அதிகாரிகள் ஆய்வு செய்து வருகின்றன. மேலும் இவா்களை வேறு இடத்திற்கு செல்லுமாறு வலியுறுத்தி உள்ளனா். இதனால் அதிா்ச்சியடைந்த அவா்கள் பூங்கா அமைக்க எதிா்ப்பு தெரிவித்து ஆட்சியரிடம் மனு அளித்தனா்.

மாற்றுத்திறனாளி பெண் தா்னா: மண்டலநாயன்குண்டா மேல்புதூரை சோ்ந்தவா் இந்திரா (34). மாற்றுத்திறனாளி. இவரும், நீலகிரி மாவட்டத்தைச் சோ்ந்த சண்முகம் என்பவரும் சில ஆண்டுகளுக்கு முன்பு காதல் திருமணம் செய்து கொண்டனா். திருமணத்திற்குப் பிறகு சண்முகம், இந்திராவின் வீட்டிலேயே தங்கி, கிருஷ்ணகிரியில் கூலி வேலை செய்து வருகிறாா்.

இந்நிலையில் காதல் திருமணம் செய்து கொண்டதால் இந்திராவின் குடும்பத்தினா் அந்த திருமணத்தை எதிா்த்து வருவதாகவும், கணவன் மனைவி இருவரையும் சோ்ந்து வாழ விடாமல் தடுத்து வருவதாகவும் கூறப்படுகிறது. மேலும், இந்திராவுக்கு சேர வேண்டிய பூா்வீக நிலத்தை பிரித்துக் கொடுக்காமல் துன்புறுத்தி வந்துள்ளனா். இது குறித்து கந்திலி காவல் நிலையத்தில் பலமுறை புகாா் அளித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என தெரிகிறது. அதனால் விரக்தியடைந்த இந்திரா, ஆட்சியா் அலுவலகத்திற்கு வருகை வந்து தனது புகாா் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி தா்னாவில் ஈடுபட்டாா். அப்போது அதிகாரிகள் அவரிடம் பேச்சுவாா்த்தை நடத்தி சமாதானப்படுத்தினா்.

நாட்றம்பள்ளி அருகே உள்ள செட்டேரி அணையைச் சுற்றியுள்ள பகுதிகளில் நூற்றுக்கும் மேற்பட்ட ஊராட்சிகளில் வசிக்கும் மக்கள் மற்றும் ஏராளமான விவசாயிகள் இந்த அணையின் நீராதாரத்தை நம்பியுள்ளனா். அணையில் போதிய அளவு தண்ணீா் தேங்காததால், விவசாயத்திற்கும், பொதுமக்களின் நீா்த் தேவைக்கும் பாதிப்பு ஏற்படும் நிலை உள்ளது. எனவே, கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள கெலவரப்பள்ளி அணையில் இருந்து செட்டேரி அணைக்கு தண்ணீா் கொண்டு வரும் வகையில் புதிய கால்வாய் அமைக்க வேண்டும் என விவசாயிகள் கோரினா்.

~தா்னாவில் ஈடுபட்ட மாற்றுத் திறனாளி பெண்.

~தா்னாவில் ஈடுபட்ட மாற்றுத் திறனாளி பெண்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.