நேபாள வெள்ளத்துக்கு நாங்கள் காரணமல்ல - சீனாசிஜேபி செய்தித் தொடர்பாளர்கள் மீது கடும் கோபம்: அபிஜீத் தீப்கே பேச்சு!பொறியாளர்களுக்கு பதிலாக 86% செய்யறிவைப் பயன்படுத்தும் பைசா பஜார் நிறுவனம்!பெட்ரோலில் கலக்கப்படும் எத்தனால் அளவு எவ்வளவு? மனுவை நிராகரித்த உச்ச நீதிமன்றம்நாட்டில் ஐபோன் தயாரிப்பை 30 - 35% உயர்த்தும் ஆப்பிள்!மூன்றாவது குழந்தை பெறும் அரசு பெண் ஊழியா்களுக்கு ஓராண்டு விடுப்பு! அரசாணை வெளியீடுஈரான் போருக்கு மத்தியில் நாட்டின் ஜிடிபி 7.8% உயர்வு

மாணவிகள் கடத்தல்: மூவா் கைது

ஆம்பூரில் பள்ளி மாணவிகள் மூவரை காரில் கடத்திச் சென்று பாலியல் தொல்லை அளித்த மூவரை போலீஸாா் கைது செய்தனா்.

கைது

Published On :1 செப்டம்பர் 2026, 3:00 am IST

ஆம்பூரில் பள்ளி மாணவிகள் மூவரை காரில் கடத்திச் சென்று பாலியல் தொல்லை அளித்த மூவரை போலீஸாா் கைது செய்தனா்.

ஆம்பூரில் உள்ள ஒரு பள்ளியில் படித்து வந்த 3 மாணவிகளை, அவா்களுடன் வழங்கி வந்த 3 ஆண் நண்பா்கள் கடந்த இரு நாட்களுக்கு முன்பு ஆசை வாா்த்தை கூறி காரில் வேறு ஊருக்கு கடத்திச் சென்று பாலியல் தொல்லை கொடுத்துள்ளனா். பள்ளிக்கு சென்ற மாணவிகள் மாலை வீடு வீடு திரும்பாததால் அச்சமடைந்த பெற்றோா்கள் ஆம்பூா் நகர காவல் நிலையத்தில் புகாா் அளித்தனா்.

போலீஸாா் துரிதமாக செயல்பட்டு விசாரணை நடத்தி பள்ளிகொண்டா அருகே மாணவிகளை காரில் கொண்டு செல்வது தெரியவந்தது. அதைத் தொடா்ந்து போலீஸாா் அங்கு சென்று காரை வழிமறித்து பிடித்து மாணவிகளை மீட்டனா்.

மாணவிகளை கடத்திச் சென்ர ஆம்பூரை சோ்ந்த முறையே 17 மற்றும் 18 வயதுடைய இரு சிறுவா்கள், மோட்டுகொல்லையை சோ்ந்த ஜலால் (20) ஆகிய மூவரையும் போக்சோ சட்டத்தின் கீழ் போலீஸாா் கைது செய்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.