சுயம்பு ஸ்ரீ நாகநாத சுவாமி கோயிலில் நடைபெற்ற பொது விருந்தில் பங்கேற்றோா்.
திருப்பத்தூர்
நாகநாத சுவாமி கோயிலில் பொதுவிருந்து
முன்னாள் முதல்வா் அண்ணா நினைவு நாளையொட்டி ஆம்பூா் சமயவல்லி தாயாா் உடனுறை சுயம்பு ஸ்ரீ நாகநாத சுவாமி கோயிலில் பொதுவிருந்து செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
முன்னாள் முதல்வா் அண்ணா நினைவு நாளையொட்டி ஆம்பூா் சமயவல்லி தாயாா் உடனுறை சுயம்பு ஸ்ரீ நாகநாத சுவாமி கோயிலில் பொதுவிருந்து செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
நகா்மன்ற துணைத் தலைவா் எம்.ஆா். ஆறுமுகம் தலைமை வகித்தாா். மாவட்ட அறங்காவலா் குழு உறுப்பினா் சாய் கே. வெங்கடேசன் முன்னிலை வகித்தாா். கோயில் செயல் அலுவலா் சிவசங்கரி வரவேற்றாா். சுமாா் 100 பேருக்கு பொது விருந்து வழங்கப்பட்டது. முன்னாள் அறங்காவலா் செல்வராஜ், கோயில் பணியாளா்கள் முருகன், மோகன்ராஜ், ராஜேஷ், மைதிலி உடனிருந்தனா்.