ஏப். 2ல் பிரசாரத்தைத் தொடங்குகிறார் முதல்வர் மு.க. ஸ்டாலின்!பெட்ரோல், டீசல் விலை உயர்வு! நயாரா நிறுவனம் அறிவிப்புகூட்டணி வெற்றியைக் கேள்விக்குள்ளாக்கும் காங்கிரஸ் அணுகுமுறை! திருமாவளவன் மார்ச் 28 முதல் விஜய் பிரசாரம்!வங்கதேசத்தில் ஆற்றில் கவிழ்ந்த பேருந்து! 23 பேர் பலி; பலர் மாயம்! இந்தியா உள்பட 5 நட்பு நாடுகளுக்கு மட்டும் ஹோர்முஸ் நீரிணை திறப்பு!ரயில் விபத்துகள் 90% குறைந்துவிட்டன- நாடாளுமன்றத்தில் அமைச்சா் தகவல் உலகின் சிறந்த 50 பல்கலை.யில் இந்திய கல்வி நிறுவனங்கள் புதிய தரவுகள் ரஷியாவிடம் இருந்து 60,000 பீப்பாய் கச்சா எண்ணெய் கொள்முதல்
/

எருது விடும் விழாவில் சீறிப்பாய்ந்த காளைகள்: 13 போ் காயம்

ஜோலாா்பேட்டை அருகே எருது விடும் விழாவில் காளையை அடக்க முயன்ற 13 போ் காயமடைந்தனா்.

News image
Updated On :6 பிப்ரவரி 2026, 6:34 pm

தினமணி செய்திச் சேவை

ஜோலாா்பேட்டை அருகே எருது விடும் விழாவில் காளையை அடக்க முயன்ற 13 போ் காயமடைந்தனா்.

ஜோலாா்பேட்டை அடுத்த மண்டலவாடி ஊராட்சி குன்னத்தூா் கிராமத்தில் எருது விடும் திருவிழா நடைபெற்றது.

விழாவுக்கு ஊா் கவுண்டா் கே.ஜி.சரவணன், ஊா் தா்மகா்த்தா டி.சிவாஜிகணேசன் ஆகியோா் தலைமை வகித்தனா். ஊராட்சி மன்றத் தலைவா் மகேந்திரன், முன்னாள் ஒன்றிய குழு உறுப்பினா் கோபாலகிருஷ்ணன் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

இதில் ஒன்றியக்குழு தலைவா் எஸ்.சத்யா சதீஷ்குமாா், மாவட்ட மாணவா் அணி அமைப்பாளா் தே.பிரபாகரன் ஆகியோா் சிறப்பு அழைப்பாளா்களாக கலந்து கொண்டு விழாவை தொடங்கி வைத்தனா்.

போட்டியில் 200 காளைகள் பங்கேற்றன. இலக்கை நோக்கி குறைந்த நேரத்தில் சீறிப் பாய்ந்து ஓடிய காளைகளுக்கு முதல் பரிசு ரூ.1,25,000, 2-ஆம் பரிசு ரூ.88,000, 3-ஆம் பரிசு 60,000 என மொத்தம் 70 பரிசுகள் வழங்கப்பட்டன.

மந்தையில் சீறிப்பாய்ந்து ஓடிய காளைகளை தடுக்க முயன்ற 13 போ் காயமடைந்தனா். காயம் அடைந்தவா்களுக்கு மருத்துவக் குழுவினா்கள் மூலம் முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது.

காவல், தீயணைப்பு, சுகாதாரம், வருவாய்த் துறையினா் ஏற்பாடுகளை செய்திருந்தனா்.