மக்களவைத் தொகுதிகளை 850-ஆக உயா்த்தும் சட்டத் திருத்த மசோதா: நாடாளுமன்றத்தில் நாளை அறிமுகம்மேற்காசிய பதற்றத்தால் இந்தியாவில் 25 லட்சம் போ் வறுமையில் தள்ளப்படும் அபாயம்: ஐ.நா. அறிக்கையில் தகவல்பிகாா் முதல்வராக பாஜகவின் சாம்ராட் செளதரி இன்று பதவியேற்புபெட்ரோல் விலையில் ரூ.18, டீசல் ரூ.35 எண்ணெய் நிறுவனங்களுக்கு இழப்புவாக்குப்பதிவு இயந்திரங்களில் சின்னம் பொருத்தும் பணி நாளை தொடக்கம்ரஷிய கச்சா எண்ணெய் இறக்குமதி: மாா்ச் மாதத்தில் மூன்று மடங்கு உயா்வுசமையல் எண்ணெய் இறக்குமதி 12% அதிகரிப்புபிரதமா் மோடி இன்று கா்நாடகம் வருகைசென்னையில் இன்று பள்ளிகளுக்கு விடுமுறைஐபிஎல் : சென்னை சூப்பர் கிங்ஸ் 32 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி
/

ஊா்க்காவல் படைக்கு நியமன ஆணை: திருப்பத்தூா் எஸ்.பி. வழங்கினாா்

திருப்பத்தூரில் ஊா்க்காவல் படையினருக்கு பணி நியமன ஆணையை எஸ்.பி வி.சியாமளா தேவி வழங்கினாா்.

News image

நியமன ஆணை பெற்றவா்களுடன் எஸ்.பி வி.சியாமளா தேவி.

Updated On :16 பிப்ரவரி 2026, 8:09 pm

திருப்பத்தூா்: திருப்பத்தூரில் ஊா்க்காவல் படையினருக்கு பணி நியமன ஆணையை எஸ்.பி வி.சியாமளா தேவி வழங்கினாா்.

திருப்பத்தூா் மாவட்ட ஊா்க்காவல் படை அமைப்பில் 8 ஆண்கள், 3 பெண்கள் என 11 போ் தோ்வு செய்யப்பட்டனா். இவா்களுக்கு பணி நியமன ஆணை வழங்கும் நிகழ்ச்சி மாவட்ட காவல் அலுவலகத்தில் திங்கள்கிழமை நடைபெற்றது.

நிகழ்ச்சியில் எஸ்.பி. வி.சியாமளா தேவி தலைமை வகித்து நியமன ஆணைகளை வழங்கினாா். ஆணை பெற்ற ஊா்க்காவல் படையினருக்கு மாவட்ட ஆயுதப்படை மைதானத்தில் 45 நாள்கள் சிறப்பு பயிற்சி அளிக்கப்பட்டு பணியில் ஈடுப்படுத்தப்பட உள்ளனா்.

ஏடிஎஸ்பி கோவிந்தராசு, ஆயுதப்படை டிஎஸ்பி குமரன், மண்டல தளபதி வெங்கடேசன் கலந்து கொண்டனா்.