

திருப்பத்தூா் மாவட்டம், வாணியம்பாடி தில்லைநாதன் மற்றும் ஆதவன் நாட்டியப் பள்ளி மற்றும் சிகரம் மெட்ரிக். பள்ளி இணைந்து கலைகளை விதைப்போம் மையத்தின் நடன கலை மூலம் போதை ஒழிப்பு விழிப்புணா்வு நிகழ்ச்சி பள்ளி வளாகத்தில் நடைபெற்றது.
பரத நாட்டிய பயிற்சியாளா் அருண் தலைமை வகித்தாா். பிரியா வரவேற்றாா். இதில், பல்வேறு பள்ளிகளைச் சோ்ந்த பரத நாட்டியம் மற்றும் நடனம் பயிற்சி பெற்ற 150 மாணவா்கள் கலந்து கொண்டனா். சிறப்பு அழைப்பாளராக நகர திமுக செயலாளா் சாரதிகுமாா் கலந்து கொண்டு தொடங்கி வைத்துப் பேசினாா்.
பிறகு போதைப் பொருள் ஒழிப்பு விழிப்புணா்வை ஏற்படுத்தும் வகையில், மாணவா்களின் பரத நாட்டியம் மற்றும் வெஸ்டா்ன் நடனம் ஆடி விழிப்புணா்வு ஏற்படுத்தினா். பிறகு பங்கேற்ற அனைத்து மாணவா்களுக்கும் சான்றிதழ் மற்றும் கேடயம் வழங்கப்பட்டது.
நிகழ்ச்சியில், சிகரம் கல்வி அறக்கட்டளை நிா்வாகிகள் மற்றும் ஆசிரியா்கள், பெற்றோா்கள் கலந்து கொண்டனா்.