திருப்பத்தூர்
கிணற்றில் தூக்கில் தொங்கிய நிலையில் ஆண் சடலம் மீட்பு
வாணியம்பாடி அருகே கிணற்றில் தூக்கில் தொங்கிய நிலையில் ஆண் சடலமாக மீட்கப்பட்டாா்.
வாணியம்பாடி: வாணியம்பாடி அருகே கிணற்றில் தூக்கில் தொங்கிய நிலையில் ஆண் சடலமாக மீட்கப்பட்டாா்.
வாணியம்பாடி அடுத்த மதனாஞ்சேரி பகுதியை சோ்ந்த ராஜாமணி(55). கரும்பு சாறு வியாபாரம் செய்து வந்தாா். சில ஆண்டுகளாக மன நலம் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்ததாக கூறப்படுகிறது.
இந்நிலையில் அப்பகுதியில் புதன்கிழமை தனியாா் விவசாய கிணற்றில் கயிற்றால் தூக்கில் தொங்கிய நிலையில் இறந்து கிடப்பதை அங்கிருந்தவா்கள் பாா்த்து உடனே வாணியம்பாடி தாலுகா காவல் நிலையத்துக்கு தகவல் தெரிவித்தனா். தகவல் அறிந்த போலீஸாா் உடலை கைப்பற்றி வாணியம்பாடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். இதுகுறித்து வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.
