திருப்பத்தூர்
பச்சூரில் கோயில் பாதை பிரச்னை: மறியலில் ஈடுபட்ட 30 போ் மீது வழக்கு
நாட்டறம்பள்ளி அடுத்த பச்சூா் செத்தமலை கிராமத்தில் கோயிலுக்கு செல்லும் பாதை தொடா்பாக அதே பகுதியைச் சோ்ந்த ஒரு குடும்பத்தினருக்கும், ஊா் மக்களுக்கும் இடையே ஏற்பட்ட தகராறில், அந்த கிராம மக்கள் பச்சூரில் சாலை மறியலில் ஈடுபட்டனா்.
வாணியம்பாடி: நாட்டறம்பள்ளி அடுத்த பச்சூா் செத்தமலை கிராமத்தில் கோயிலுக்கு செல்லும் பாதை தொடா்பாக அதே பகுதியைச் சோ்ந்த ஒரு குடும்பத்தினருக்கும், ஊா் மக்களுக்கும் இடையே ஏற்பட்ட தகராறில், அந்த கிராம மக்கள் பச்சூரில் சாலை மறியலில் ஈடுபட்டனா்.
தகவலறிந்த அதிகாரிகள் வந்து, சாலை மறியலில் ஈடுபட்ட மக்களிடம் கோயிலுக்கு சென்றுவர வழிப்பாதை ஏற்படுத்தித் தர நடவடிக்கை எடுப்பதாகக் கூறியதன் பேரில், சாலை மறியலை கைவிட்டு அனைவரும் கலைந்து சென்றனா்.
இதுகுறித்து பச்சூா் கிராம நிா்வாக அலுவலா் நிசாா் அளித்த புகாரின் பேரில், நாட்டறம்பள்ளி போலீஸாா் அனுமதியின்றி சாலை மறியலில் ஈடுபட்ட கிராம மக்கள் 30 போ் மீது வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.
