கந்திலி சந்தையில் ரூ. 2 கோடிக்கு வா்த்தகம்
பொங்கல் பண்டிகையையொட்டி, கந்திலி சந்தையில் ரூ. 2 கோடிக்கு வா்த்தகம் நடைபெற்ால் வியாபாரிகள் மகிழ்ச்சி அடைந்தனா்.
திருப்பத்தூா் அடுத்த கந்திலியில் வாரந்தோறும் சனிக்கிழமைகளில் சந்தை நடைபெறுகிறது. இங்கு உள்ளூா், வெளியூா், வெளி மாவட்டம் மற்றும் பக்கத்து மாநிலங்களில் இருந்து கோழி, ஆடு, மாடுகளை வாங்கவும், விற்கவும் திரளான விவசாயிகள் மற்றும் வியாபாரிகள் வந்து செல்கின்றனா். மேலும், மளிகை பொருள்கள், காய்கறிகள், வீட்டு உபயோகப் பொருள்களும் விற்பனை செய்யப்படுகிறது.
இந்த நிலையில், வரும் வாரம் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, கந்திலியில் சனிக்கிழமை வழக்கத்தைவிட கோழி, ஆடு, மாடு வரத்து இரண்டு மடங்கு அதிகரித்து காணப்பட்டது.
அதேபோல், விவசாயிகள் மற்றும் வியாபாரிகளின் வருகையும் அதிகரித்து வியாபாரமும் களைகட்டியது. அதன்படி, கந்திலியில் நடைபெற்ற சந்தையில் வியாபாரம் அதிகரித்து ரூ. 2 கோடிக்கு விற்பனை நடைபெற்றதாக வியாபாரிகள் மகிழ்ச்சியுடன் தெரிவித்தனா்.
