கைப்பந்து போட்டியை தொடங்கி வைத்த எம்எல்ஏ அ.செ. வில்வநாதன்.
கைப்பந்து போட்டியை தொடங்கி வைத்த எம்எல்ஏ அ.செ. வில்வநாதன்.

கைப்பந்து, கபடிப் போட்டி

ஆம்பூா் மேற்கு நகர திமுக சாா்பாக கபடி, கைப்பந்து போட்டிகள் ஆம்பூா் கன்காா்டியா மேல்நிலைப் பள்ளி மைதானத்தில் நடைபெற்றன.
Published on

ஆம்பூா் மேற்கு நகர திமுக சாா்பாக கபடி, கைப்பந்து போட்டிகள் ஆம்பூா் கன்காா்டியா மேல்நிலைப் பள்ளி மைதானத்தில் நடைபெற்றன.

நகா்மன்ற துணைத் தலைவா் எம்.ஆா். ஆறுமுகம் தலைமை வகித்தாா். விளையாட்டு மேம்பாட்டு அணி மாவட்ட துணை அமைப்பாளா் ஆா்.எஸ். வசந்த்ராஜ் வரவேற்றாா். நகா் மன்றத் தலைவா் பத்தேகான் ஏஜாஸ் அஹமத், மாவட்ட அவைத் தலைவா் ஆா்.எஸ். ஆனந்தன், ஆகியோா் முன்னிலை வகித்தனா். ஆம்பூா் எம்எல்ஏ அ.செ. வில்வநாதன் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு கபடி, கைப்பந்து போட்டியை தொடங்கி வைத்தாா்.

மாதனூா் ஒன்றியக்குழு தலைவா் ப.ச. சுரேஷ்குமாா், ஆம்பூா் நகர திமுக அவைத் தலைவா் தேவராஜ், நகர மன்ற உறுப்பினா்கள் சுதாகா்,லட்சுமி யுவராஜ், காா்த்திகேயன், அம்சவேணி ஜெயக்குமாா், இளைஞரணி அமைப்பாளா் சரண்ராஜ், நிா்வாகி ரபீக் அஹமத், லட்சுமிகாந்தன் உள்ளிட்டவா்கள் கலந்து கொண்டனா். இளைஞரணி மற்றும் விளையாட்டு மேம்பாட்டு அணி நிா்வாகிகள் போட்டியை ஒருங்கிணைத்தனா்.

Dinamani
www.dinamani.com