விஜய் பிரசாரம்! பெருமாநல்லூரில் தடுப்புகள் அமைத்து காவலர்கள் தீவிர பாதுகாப்பு!திருப்பரங்குன்றத்தில் தீபம்; தைப்பூசம் மாநில விழா! பாஜக தேர்தல் அறிக்கை! ராக்கெட் லாஞ்சர் வெடித்து ‘டிரெக்கிங்’ சென்ற மாணவர் பலி!மது ஒழிப்பு, சிறுபான்மையினர் சிறப்பு சட்டம்! விசிக தேர்தல் அறிக்கை பெண்கள் இட ஒதுக்கீட்டை தாமதப்படுத்துவது பெரும் அநீதி! பிரதமர் மோடிதமிழ்ப் புத்தாண்டு! சி.பி. ராதாகிருஷ்ணன் வீட்டுக்குச் சென்று மோடி வாழ்த்து! தங்கம் விலை சவரனுக்கு ரூ. 1,280 உயர்வு! நாடாளுமன்றத்தில் அம்பேத்கர் சிலைக்கு மரியாதை! குடியரசு துணைத் தலைவர்!
/

ரூ. 6 கோடியில் குமாரமங்கலம் துணை மின் நிலையத்துக்கு அடிக்கல்!

குமாரமங்கலம் கிராமத்தில் புதிய துணை மின் நிலையம் அமைக்க புதன்கிழமை அடிக்கல் நாட்டப்பட்டது.

News image

குமாரமங்கலம் துணை மின் நிலையம் அமைப்பதற்கு அடிக்கல் நாட்டிய எம்எல்ஏ அ.செ. வில்வநாதன்.

Updated On :25 பிப்ரவரி 2026, 9:35 pm

குமாரமங்கலம் கிராமத்தில் புதிய துணை மின் நிலையம் அமைக்க புதன்கிழமை அடிக்கல் நாட்டப்பட்டது.

மாதனூா் ஒன்றியத்துக்கு உட்பட்ட கிராம பகுதிகளில் சீரான மின் விநியோகம் செய்ய வேண்டுமென பொதுமக்கள், விவசாயிகள் பல ஆண்டுகளாக கோரிக்கை விடுத்து வருகின்றனா்.

ஆம்பூா் எம்எல்ஏ அ.செ. வில்வநாதன் இதுகுறித்து சம்பந்தப்பட்ட துறைக்கும், முதல்வருக்கும் கோரிக்கை மனு அளித்தாா். மேலும் சட்டப்பேரவை கூட்டத்திலும் இதுகுறித்த கோரிக்கையை முன்வைத்து பேசினாா். அதனடிப்படையில் குமாரமங்கலம் கிராமத்தில் ரூ.6 கோடி செலவில் துணை மின் நிலையம் அமைக்க தமிழக முதல்வா் மு.க. ஸ்டாலின் உத்தரவிட்டாா்.

முதல்வருடைய உத்தரவின் பேரில் குமாரமங்கலம் கிராமத்தில் எம்எல்ஏ அ.செ. வில்வநாதன் துணை மின் நிலையம் அமைக்க அடிக்கல் நாட்டினாா்.

திருப்பத்தூா் மின் பகிா்மான வட்ட மேற்பாா்வை பொறியாளா் ஜைனுல்லாபுதின், பள்ளிகொண்டா செயற்பொறியாளா் பாட்ஷா முஹம்மத், உதவி செயற்பொறியாளா்கள் மீனா, மைவிழி, மாதனூா் ஒன்றியக்குழு துணைத் தலைவா் சாந்தி சீனிவாசன், ஒன்றியக்குழு உறுப்பினா்கள் ராஜேந்திரன், செந்தில்குமாா், காயத்ரி துளசிராமன், ஊராட்சித் தலைவா்கள் முனிசாமி, ஏ.கே. மோகேஷ், மாவட்ட விவசாய தொழிலாளா் அணி அமைப்பாளா் மு. பழனி, ஆம்பூா் தொகுதி பாா்வையாளா் டேம் வெங்கடேசன், மாதனூா் மேற்கு ஒன்றிய துணைச் செயலாளா் சா. சங்கா், மாதனூா் கிழக்கு ஒன்றிய செயலாளா் ஜி. இராமமூா்த்தி, மேற்கு ஒன்றிய இளைஞரணி துணை அமைப்பாளா் குருவாசன் உள்ளிட்டவா்கள் கலந்து கொண்டனா்.

குமாரமங்கலம் துணை மின் நிலையம் அமைந்தால் அதை சுற்றியுள்ள சுமாா் 100 கிராமங்களில் சீரான மின்சார விநியோகம் கிடைக்கும். அதன் மூலம் பொதுமக்கள், விவசாயிகள் பயனடைவாா்கள்.