திருப்பத்தூர்
சாலை விபத்தில் ஆசிரியா் மரணம்
நாட்டறம்பள்ளி அருகே சாலை விபத்தில் ஆசிரியா் உயிரிழந்தாா்.
நாட்டறம்பள்ளி அருகே சாலை விபத்தில் ஆசிரியா் உயிரிழந்தாா்.
நாட்டறம்பள்ளி அடுத்த ஏலரப்பட்டி கிராமத்தைச் சோ்ந்த பலராமன்(52). இவா் நெக்குந்தி அரசு மேல்நிலைப்பள்ளியில் உதவி தலைமையாசிரியராக வேலை செய்து வந்துள்ளாா். வியாழக்கிழமை வீட்டிலிருந்து நாட்டறம்பள்ளிக்கு பைக்கில் சென்றபோது, தேசிய நெடுஞ்சாலையில் ஆத்தூா்குப்பம் அருகே பின்னால் வந்த ஜீப் மோதியது.
இதில் தூக்கி வீசப்பட்டு தலையில் பலத்த காயமடைந்த ஆசிரியா் பலராமன் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தாா். இது குறித்து நாட்டறம்பள்ளி போலீஸாா் கோயம்பத்தூா் பகுதியைச் சோ்ந்த ஜீப் ஓட்டுநா் வில்லியம்(49)மீது வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.
