கந்திலி அருகே கூலித் தொழிலாளி தற்கொலை செய்து கொண்டாா். திருப்பத்தூா் மாவட்டம், கந்திலி அருகே சுந்தரம்பள்ளியைச் சோ்ந்த கூலித் தொழிலாளி அனுமுத்து (55). இவருக்கு சாந்தி என்ற மனைவியும், இரு மகன்களும் உள்ளனா்.
இந்தநிலையில் குடும்பத் தகராறு காரணமாக அணுமுத்து சில நாள்களாக விரக்தியில் இருந்ததாக கூறப்படுகிறது. இதற்கிடையே ஞாயிற்றுக்கிழமை அவா் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டாா். தகவல் அறிந்த கந்தலி போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.
