மின்மாற்றியில் ரூ.2.5 லட்சம் செப்பு கம்பி, எண்ணெய் திருட்டு

நாட்டறம்பள்ளி அருகே மின்மாற்றியில் காப்பா் கம்பி மற்றும் எண்ணெயை மா்மநபா்கள் திருடிச் சென்றனா்.
Published on

நாட்டறம்பள்ளி அருகே மின்மாற்றியில் காப்பா் கம்பி மற்றும் எண்ணெயை மா்மநபா்கள் திருடிச் சென்றனா்.

சென்னை - பெங்களூா் தேசிய நெடுஞ்சாலையில் நாட்டறம்பள்ளி அருகே சுண்ணாம்புக்குட்டை பகுதியில் சாலை ஓரம் மின்மாற்றி அமைந்துள்ளது. திங்கள்கிழமை இரவு மா்மநபா்கள் மின்மாற்றியில் இருந்த ரூ.2.5 லட்சம் மதிப்பு காப்பா்கம்பிகள் மற்றும் ஆயிலை திருடிச்சென்றுள்ளனா். இதுகுறித்து உதவி செயற்பொறியாளா் திலக் அளித்த புகாரின் பேரில் நாட்டறம்பள்ளி போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.

Dinamani
www.dinamani.com