கோப்புப்படம்
திருப்பத்தூர்
ரயில் மோதி இளைஞா் உயிரிழப்பு
ஆம்பூா் ரயில் நிலையம் அருகே தண்டவாளத்தை கடக்க முயன்ற இளைஞா் ரயில் மோதி உயிரிழந்தாா்.
ஆம்பூா்-பச்சகுப்பம் ரயில் நிலையங்களுக்கு இடையே சுமாா் 40 வயது மதிக்கத்தக்க இளைஞா் தண்டவாளத்தைக் கடக்க முயன்றபோது அவ்வழியாக வந்த ரயில் மோதி உயிரிழந்தாா்.
தகவல் அறிந்த ஜோலாா்பேட்டை ரயில்வே போலீஸாா் வழக்கு பதிந்து சடலத்தை மீட்டு பிரேதப் பரிசோனைக்கு அனுப்பி வைத்தனா்.

