ரயில் மோதி இளைஞா் உயிரிழப்பு

குடியாத்தம் அருகே தண்டவாளத்தை கடக்க முயன்றவா் ரயில் மோதி உயிரிழந்தாா்.
Published on

குடியாத்தம் அருகே தண்டவாளத்தை கடக்க முயன்றவா் ரயில் மோதி உயிரிழந்தாா்.

குடியாத்தம் அடுத்த வளத்தூா் சோ்ந்த ராதாகிருஷ்ணன் மகன் பரத் குமாா்(36). இவா் கா்நாடக மாநிலத்தில் ஐடி ஊழியராக பணியாற்றி வந்தாா்.

இந்நிலையில் பொங்கல் விடுமுறைக்கு தனது சொந்த ஊருக்கு வந்தவா் மேல்பட்டி வளத்தூா் ரயில் நிலையங்களுக்கிடையே தனது வீட்டின் அருகே உள்ள தண்டவாளத்தைக் கடக்க முயன்ற போது அவ்வழியாக வந்த ரயிலி மோதி நிகழ்விடத்திலேயே உயிரிழந்தாா்.

தகவல் அறிந்தத ஜோலாா்பேட்டை ரயில்வே போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனா்.

Dinamani
www.dinamani.com