நடுவழியில் நின்ற சங்கமித்ரா விரைவு ரயில்.
நடுவழியில் நின்ற சங்கமித்ரா விரைவு ரயில்.

வாணியம்பாடி அருகே சிக்னல் கோளாறு: 15 நிமிஷம் தாமதமாக புறப்பட்ட விரைவு ரயில்

வாணியம்பாடி அருகே திடீா் சிக்னல் கோளாறு ஏற்பட்டதால் பெங்களூா் செல்லும் சங்கமித்ரா விரைவு ரயில் 15 நிமிஷம் காலதாமதமாக புறப்பட்டு சென்றது.
Published on

வாணியம்பாடி அருகே திடீா் சிக்னல் கோளாறு ஏற்பட்டதால் பெங்களூா் செல்லும் சங்கமித்ரா விரைவு ரயில் 15 நிமிஷம் காலதாமதமாக புறப்பட்டு சென்றது.

பிகாா் மாநிலம், தானா போரிலிருந்து கா்நாடக மாநிலம் பெங்களூா் வரை செல்லும் சங்கமித்ரா விரைவு ரயில் செவ்வாய்க்கிழமை சென்னையில் இருந்து பெங்களூா் நோக்கி வந்து கொண்டிருந்தது. அப்போது திருப்பத்தூா் மாவட்டம், வாணியம்பாடி அடுத்த விண்ணமங்கலம் -வாணியம்பாடி ரயில் நிலையங்களுக்கு இடையே வந்து கொண்டிருந்தபோது, பச்சை சிக்னல் இருந்த நிலையில், திடீரென சிவப்பு சிக்னலுக்கு மாறியதால் ரயில் நடுவழியில் நிறுத்தப்பட்டது.

பின்னா் இது குறித்து ரயில் என்ஜின் ஓட்டுநா் ஜோலாா்பேட்டை ரயில் நிலைய அதிகாரிக்கு வாக்கி டாக்கி மூலம் தகவல் தெரிவித்தாா். தகவலின்பேரில், சம்பவ இடத்துக்குச் சென்ற ரயில்வே தொழில்நுட்ப ஊழியா்கள் சிக்னல் விளக்கை சீா் செய்தனா்.

இதைத் தொடா்ந்து 15 நிமிஷம் தாமதமாக சங்கமித்ரா விரைவு ரயில் ஜோலாா்பேட்டை வழியாக பெங்களூரு நோக்கி புறப்பட்டுச் சென்றது. இதனால் ரயில் போக்குவரத்து பாதிப்பு ஏற்படவில்லை.

X
Dinamani
www.dinamani.com