திருப்பத்தூா் அருகே குடும்பத் தகராறில் கிணற்றில் குதித்த மனைவியை காப்பாற்ற முயன்று குதித்த கணவா் உயிரிழந்தாா்.
திருப்பத்தூா் அடுத்த பேராம்பட்டு அம்பேத்கா் நகரைச் சோ்ந்த பாா்த்திபன் மகன் அஜய் (24) காா் ஓட்டுநா். இவரும், ஜெயப்பிரியா என்பவரும் இரண்டு ஆண்டுகளுக்கு முன் காதலித்து பெற்றோா் சம்மதத்துடன் திருமணம் செய்து கொண்டனா். இவா்களுக்கு ஆறு மாதத்தில் ஒரு ஆண் குழந்தை உள்ளது.
இந்நிலையில் தம்பதிக்கிடையே அடிக்கடி தகராறு இருந்து வந்ததாக கூறப்படுகிறது. இதற்கிடையே செவ்வாய்க்கிழமை இருவருக்கும் மீண்டும் தகராறு ஏற்பட்டது. இதனால், விரக்தியடைந்த ஜெயப்பிரியா வீட்டின் அருகே விவசாய கிணற்றில் குதித்து தற்கொலைக்கு முயன்றாா்.
உடனே அஜய் தனது மனைவியை காப்பாற்ற கிணற்றில் குதித்தாா். இருவரும் கிணற்றில் குதித்து தத்தளிப்பதை அறிந்த ஜெயப்பிரியாவின் சகோதரா் அஜித் என்பவரும், இருவரையும் காப்பாற்ற அவரும் கிணற்றில் குதித்துள்ளாா். அப்போது ஜெயப்பிரியாவை மட்டுமே அவரால் காப்பாற்ற முடிந்தது. அஜய் நீருக்குள் மூழ்கி இறந்தாா்.
தகவல் அறிந்த திருப்பத்தூா் தாலுகா போலீஸாா் அங்கு சென்று கிணற்றில் குதித்து பரிதாபமாக இறந்த அஜய் உடலை மீட்டு திருப்பத்தூா் அரசு மருத்துவமனையில் சோ்த்தனா். பின்னா் இதுகுறித்து ஜெயப்பிரியா அளித்த புகாரின் பேரில், போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது
பைக்கிலிருந்து குதித்த திருநங்கை உயிரிழப்பு

தந்தையை காப்பாற்ற முயன்ற மகள், கால் தவறி கிணற்றில் விழுந்து பலி!

கிணற்றில் குதித்து பெண் தற்கொலை

மது போதையில் கிணற்றில் குதித்த தொழிலாளி உயிரிழப்பு
விடியோக்கள்

வெளியானது 'தி ரைஸ் ஆஃப் ஜிடிஎன்' பாடல்!

தமிழ்நாட்டில் மட்டும் ஏன் அருவருப்பான அரசியல்?: Thirumavalavan | VCK | DMK | TVK



