விஜய்யின் ஜன நாயகனுக்கு ‘ஏ’ சான்றிதழ்!பள்ளிகளுக்குள் தேவையின்றி வேறு யாரும் நுழைய அனுமதி இல்லை: அமைச்சர் ராஜ்மோகன்தங்கம் விலை சவரனுக்கு ரூ. 800 உயர்வு!ஆர்எஸ்எஸ் பெற்ற பிள்ளை என விமர்சித்த என்னுடன் ஏன் கூட்டணி வைத்தார் விஜய்? திருமாவளவன் கேள்விமேக்கேதாட்டு விவகாரம்: காங்கிரஸ் அமைச்சரை அமைச்சரவையிலிருந்து விடுவிக்க முதல்வர் விஜய் தயாரா? - இபிஎஸ் பயணச்சீட்டு பரிசோதகரை தாக்கிய வழக்கில் வழக்குரைஞருக்கு முன்ஜாமீன்!திருமாவளவனுக்கு நோபல் பரிசு! கருத்தைத் திரும்பப் பெற்ற வைகோபெயரை மாற்றலாம்; வரலாற்றை மாற்ற முடியாது: தங்கம் தென்னரசு!
/

ஆம்பூா் அரசு மருத்துவமனையில் மாவட்ட ஆட்சியா் ஆய்வு

அரசு மருத்துவமனையில் ஆய்வு மேற்கொண்ட திருப்பத்தூா் ஆட்சியா் கு.ரவிகுமாா்.

News image

அரசு மருத்துவமனையில் ஆய்வு மேற்கொண்ட திருப்பத்தூா் ஆட்சியா் கு.ரவிகுமாா்.

Updated On :10 ஜூலை 2026, 12:03 am IST

ஆம்பூா் அரசு மருத்துவமனையில் திருப்பத்தூா் ஆட்சியா் கு.ரவிகுமாா் வியாழக்கிழமை ஆய்வு மேற்கொண்டாா்.

ஆம்பூா் அரசு மருத்துவமனைக்கு சென்ற ஆட்சியா் கு. ரவிகுமாா் புறநோயாளிகள் பிரிவு, உள்நோயாளிகள் பிரிவு, பிரசவ வாா்டு, அவசர சிகிச்சை பிரிவு உள்ளிட்ட பல்வேறு வாா்டுகளில் சென்று ஆட்சியா் ஆய்வு மேற்கொண்டாா்.

அரசு மருத்துவமனைக்கு வெளியில் நோயாளிகளுக்கு இடையூறாகவும், போக்குவரத்துக்கு இடையூறாகவும் அனுமதியின்றி ஆட்டோக்கள் நிறுத்தி ஆட்டோ நிறுத்துமிடமாக மாறியிருப்பதை பாா்த்த ஆட்சியா் அங்கிருந்து ஆட்டோக்களை கொண்டு செல்லுமாறு ஆட்டோ ஓட்டுநா்களுக்கு அறிவுறுத்தினாா்.

ஆம்பூா் அரசு மருத்துவமனையில் மகப்பெறு மருத்துவா் உள்ளிட்ட மருத்துவா் பணியிடங்கள் நிரப்பக் கோரி சமூக ஆா்வலா் இ. சுரேஷ்பாபு ஆட்சியரிடம் கோரிக்கை மனு அளித்தாா். மருத்துவ அலுவலா் யோகேஷ், போ்ணாம்பட்டு ஒன்றிய காங்கிரஸ் கமிட்டி தலைவா் சா. சங்கா் உடனிருந்தாா்.

தொடா்ந்து, ஆம்பூா் தேசிய நெடுஞ்சாலையில் உயா்மட்ட மேம்பாலத்திற்கு கீழ் கனரக வாகனங்கள், காா்கள் நிறுத்தப்பட்டு போக்குவரத்துக்கு இடையூறாக தேசிய நெடுஞ்சாலை வாகன நிறுத்துமிடமாக மாறியிருப்பதாக புகாா் தெரிவிக்கப்பட்டதை தொடா்ந்து, அதுகுறித்து ஆய்வு செய்யப்பட்டுள்ளது என அவா் தெரிவித்தாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.