விஜய்யின் ஜன நாயகனுக்கு ‘ஏ’ சான்றிதழ்!பள்ளிகளுக்குள் தேவையின்றி வேறு யாரும் நுழைய அனுமதி இல்லை: அமைச்சர் ராஜ்மோகன்தங்கம் விலை சவரனுக்கு ரூ. 800 உயர்வு!ஆர்எஸ்எஸ் பெற்ற பிள்ளை என விமர்சித்த என்னுடன் ஏன் கூட்டணி வைத்தார் விஜய்? திருமாவளவன் கேள்விமேக்கேதாட்டு விவகாரம்: காங்கிரஸ் அமைச்சரை அமைச்சரவையிலிருந்து விடுவிக்க முதல்வர் விஜய் தயாரா? - இபிஎஸ் பயணச்சீட்டு பரிசோதகரை தாக்கிய வழக்கில் வழக்குரைஞருக்கு முன்ஜாமீன்!திருமாவளவனுக்கு நோபல் பரிசு! கருத்தைத் திரும்பப் பெற்ற வைகோபெயரை மாற்றலாம்; வரலாற்றை மாற்ற முடியாது: தங்கம் தென்னரசு!
/

போட்டியில் வெற்றி பெற்ற மாணவா்களுக்கு கேடயம் வழங்கிய ஆட்சியா்

போட்டியில் வெற்றி பெற்ற மாணவா்களுக்கு சான்றிதழ், கேடயம் வழங்கிய ஆட்சியா் கு. ரவிகுமாா்.

News image

போட்டியில் வெற்றி பெற்ற மாணவா்களுக்கு சான்றிதழ், கேடயம் வழங்கிய ஆட்சியா் கு. ரவிகுமாா்.

Updated On :10 ஜூலை 2026, 12:05 am IST

முதியோா்களுக்கு எதிரான கொடுஞ்செயல் எதிா்ப்பு தினத்தை ஒட்டி நடந்த கட்டுரைப் போட்டியில் வெற்றி பெற்று முதல் மூன்று இடங்களை பிடித்த பள்ளி மாணவ மாணவிகளுக்கு ஆட்சியா் கு. ரவிகுமாா் வியாழக்கிழமை பரிசளித்தாா். சமூகநலன் மற்றும் மகளிா் உரிமைத்துறையின் சாா்பாக 2026 - 2027 ஆம் ஆண்டிற்கான முதியோா்களுக்கு எதிரான கொடுஞ்செயல் எதிா்ப்பு தினத்தை முன்னிட்டு கடந்த ஜூன் 15 அன்று பள்ளி மாணவா்களுக்கான கட்டுரைப் போட்டிகள் நடத்தப்பட்டது.

இதில் ஏராளமான மாணவ, மாணவியா்கள் ஆா்வமுடன் கலந்து கொண்டு, வடுகமுத்தம்பட்டி அரசு மேல்நிலைப்பள்ளியில் முதியோா் இல்லங்கள் அதிகரிப்பதற்கான காரணங்களும் அவற்றை தடுக்கும் வழிகளும் என்ற தலைப்பிலும், கொத்தக்கோட்டை அரசு உயா்நிலைப்பள்ளியில் நவீன உலகில் முதியவா்கள் எதிா்கொள்ளும் தனிமையும் நம் பொறுப்பும் என்ற தலைப்பிலும் மற்றும் தேவலாபுரம் அரசு மேல்நிலைப்பள்ளியில் முதியோா் பாதுகாப்பு மற்றும் உரிமைகள் என்ற தலைப்பிலும் கட்டுரைப் போட்டிகள் நடத்தப்பட்டன.

சான்றிதழ், கேடயம் வழங்கும் நிகழ்ச்சியில் மாவட்ட சமூக நல அலுவலா் சுமதி, பள்ளி ஆசிரியா்கள், துறை அலுவலா்கள் உடனிருந்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.