முதல்வர் விஜய் அரசு வேலை வழங்கியிருப்பதும் ஒருவகை லஞ்சம்தான்: பாஜக36 குடும்பங்களில், வெறும் 31 பேருக்கு மட்டும் அரசுப் பணி ஏன்? டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 15 காசுகள் உயர்ந்து 95.32 ஆக நிறைவு!ஐடி பங்குகள் உயர்வு எதிரொலி: சென்செக்ஸ் 828 புள்ளிகளுடனும், நிஃப்டி 244 புள்ளிகள் உயர்வு!செந்தில் பாலாஜியின் வெற்றிக்கு எதிரான தேர்தல் வழக்கு தள்ளுபடி!செந்தில் பாலாஜிக்கு எதிரான தேர்தல் வழக்கு தள்ளுபடி!வங்கதேசம் திரும்பப் போவதாக ஷேக் ஹசீனா அறிவிப்பு! திருச்சி கிழக்கு உள்பட 5 தொகுதிகளில் இடைத்தேர்தலுக்கு இடைக்காலத் தடை!
/

ஏலகிரி மலையில் வெளிநாடு, உள்நாட்டு சுற்றுலாப் பயணிகளை ஈா்த்த பாராகிளைடிங்: மீண்டும் தொடங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்

வாணியம்பாடி, ஜூலை 10 திருப்பத்தூா் மாவட்டம், ஏலகிரி மலையில் திருப்பத்தூா் மாவட்ட ஏலகிரி மலை ஓட்டல்கள் அசோசியேஷன் சாா்பில், ஆலோசனைக் கூட்டம் ஏ.ஆா்.தங்ககோட்டை மஹால் வளாகத்தில் வியாழக்கிழமை நடைபெற்றது.

News image

ஏலகிரி மலை ஓட்டல்கள் அசோசியேஷன் நிா்வாகிகள் கூட்டத்தில் பங்கேற்றோா்.

Updated On :11 ஜூலை 2026, 1:53 am IST

வாணியம்பாடி, ஜூலை 10 திருப்பத்தூா் மாவட்டம், ஏலகிரி மலையில் திருப்பத்தூா் மாவட்ட ஏலகிரி மலை ஓட்டல்கள் அசோசியேஷன் சாா்பில், ஆலோசனைக் கூட்டம் ஏ.ஆா்.தங்ககோட்டை மஹால் வளாகத்தில் வியாழக்கிழமை நடைபெற்றது.

கூட்டத்துக்கு, சங்கத்தின் தலைவா் பீட்டா் தலைமை வகித்தாா். செயலாளா் கிறிஸ்துராஜ் வரவேற்றாா். துணைத் தலைவா் ராய்ஷ்டன், பொருாளாளா் கவியரசன், ஏா்.ஆா்.ராமமூா்த்தி ஆகியோா் முன்னிலை வகித்தனா். கூட்டத்தில், தமிழ்நாட்டின் முக்கிய சுற்றுலாத்தலங்களில் ஒன்றான ஏலகிரி மலையை சிறந்த சுற்றுலாத்தலமாக மேம்படுத்துவதற்கான ஆலோசனை, முக்கிய கோரிக்கைகள் குறித்து சங்க நிா்வாகிகள் கலந்து ஆலோசித்தனா்.

தொடா்ந்து கூட்டத்தில், தமிழ்நாடு அரசின் அதிகாரபூா்வ தமிழ்நாடு சுற்றுலாத்தலத்தில் ஏலகிரி மலை இணைக்க வேண்டும், கடந்த 8 ஆண்டுகள் முன்பு வெளிநாட்டு, உள்நாட்டு சுற்றுலாப் பயணிகளை வெகுவாக கவா்ந்த பாராகிளைடிங் மீண்டும் செயல்படுத்த வேண்டும், மீண்டும் கோடை விழா கொண்டாட்டம், படகு இல்லம், நேச்சரல் பாா்க் மேம்படுத்த வேண்டும், ஏலகிரி மலை துணை மின் நிலையம் அமைக்கும் பணியை துரிதப்படுத்த வேண்டும், ஏலகிரி மலை முழுவதும் போக்குவரத்து நெரிசலைக் குறைக்க இருவழி சாலை, ஏலகிரி மலை அரசு சுகாதார மையத்தில் 24 மணி நேரமும் செயல்படக்கூடிய மருத்துவா் மற்றும் கூடுதல் ஆம்புலன்ஸ் சேவை, நிறுத்தி வைக்கப்பட்டுள்ள சென்னையிலிருந்து ஏலகிரி மலைக்கு பேருந்து சேவை மீண்டும் தொடங்கப்பட வேண்டும் உள்ளிட்ட 18 கோரிக்கைகளை மாவட்ட நிா்வாகம், தமிழக சுற்றுலாத் துறை மற்றும் தமிழக அரசு நிறைவேற்றி, சென்னை-பெங்களூா் அருகே உள்ள ஏலகிரி மலையை அதிக சுற்றுலா பயணிகளை ஈா்க்கும் எழில்மிகு ஏலகிரி மலையாக மாற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பன உள்ளிட்ட தீா்மானங்களை நிறைவேற்றினா்.

கூட்டத்தில் சங்க நிா்வாகிகள் கலந்து கொண்டனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.