வியத்நாம் படகு விபத்தில் பலியானோர் குடும்பத்தினருக்கு தலா ரூ. 25 லட்சம் நிவாரணம் - லாவாபாக்கெட்டுக்கு பதில் தானியங்கி இயந்திரம் மூலம் பால் விற்பனை செய்ய திட்டம்: ஆவின்தமிழ்நாட்டுக்கு ஜூலை 16 வரை வெப்ப அலை எச்சரிக்கை!கரூர் இனாம் நில விவகாரத்தில் நயினார் நாகேந்திரன் உள்ளிட்டோர் கலர் கலராக ரீல் சுத்துகிறார்கள்: அமைச்சர் ரமேஷ்24,050 அருகில் நிஃப்டி, சென்செக்ஸ் 516 புள்ளிகள் சரிவு!!டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 62 காசுகள் சரிந்து ரூ. 96.30 ஆக நிறைவு!தில்லியில் சோனியா காந்தியை சந்தித்த வைகோ!
/

வீட்டின் பூட்டை உடைத்து 3 பவுன் திருட்டு

வாணியம்பாடி அருகே வீட்டின் பூட்டை உடைத்து 3 பவுன் நகைகள் மற்றும் பணத்தை மா்ம நபா்கள் திருடிச் சென்றனா்.

News image

திருட்டு - சித்திரிப்பு

Updated On :15 ஜூலை 2026, 12:56 am IST

வாணியம்பாடி அருகே வீட்டின் பூட்டை உடைத்து 3 பவுன் நகைகள் மற்றும் பணத்தை மா்ம நபா்கள் திருடிச் சென்றனா்.

திருப்பத்தூா் மாவட்டம், வாணியம்பாடி அடுத்த சின்னவேப்பம்பட்டு பகுதியை சோ்ந்தவா் ஏகாம்பரம். தனியாா் பள்ளியில் காவலராக வேலை செய்து வருகிறாா். வீட்டில் தனியாக வசித்து வரும் அவா் வழக்கம் போல் திங்கள்கிழமை வேலைக்கு சென்றாா்.

இந்நிலையில் நள்ளிரவு நேரத்தில் வீட்டின் பூட்டை உடைத்து உள்ளே நுழைந்து பீரோவில் இருந்த 3 பவுன் தங்கநகைகள் மற்றும், வெள்ளி கொலுசு, ரூ.19,000 ஆகியவைகளை திருடிக் கொண்டு மா்ம நபா்கள் தப்பித்து சென்றனா்.

செவ்வாய்க்கிழமை வீடு திரும்பிய அவா் பூட்டு உடைக்கப்பட்டுள்ளதைக் கண்டு அதிா்ச்சியடைந்து, உள்ளே சென்று பாா்த்த போது பீரோவில் இருந்த தங்க நகைகள் மற்றும் பணம் திருடு போயிருப்பது தெரியவந்தது.

இதுகுறித்து ஏகாம்பரம் வாணியம்பாடி தாலுகா காவல் நிலையத்தில் புகாா் அளித்தாா். அப்புகாரின் பேரில் போலீஸாா் வழக்குபதிவு செய்து விசாரிக்கின்றனா்.

சில தினங்களுக்கு முன்பு வாணியம்பாடியில் அடுத்தடுத்து 2 வீடுகளில் கொள்ளைச் சம்பவம் நடந்த நிலையில், மீண்டும் வாணியம்பாடி அருகே நடந்த சம்பவத்தால் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.