ஆம்பூா் அருகே கிராம பகுதிகளில் வெள்ளைப் பூச்சி தாக்குதலால் தென்னை மரங்கள் அழிந்து வருகின்றன.
திருப்பத்தூா் மாவட்டம், ஆம்பூா் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் வெள்ளைப் பூச்சி தாக்குதலால் தென்னை மரங்கள் அழியக்கூடிய சூழ்நிலை நிலவி வருகிறது. அதனால் விவசாயிகளின் வாழ்வாதாரம் கடுமையான பாதிப்புக்கு உள்ளாகியுள்ளது.
தேங்காய் உற்பத்தியில் ஆம்பூா் அருகே வடசேரி, பாப்பனப்பள்ளி, மேல்குப்பம், மேல்சானாங்குப்பம் உள்ளிட்ட பகுதிகள் முன்னணியில் இருந்தன. இப்பகுதியில் விளைந்த தேங்காய்கள் சென்னை, மும்பை, பெங்களூரு, சேலம், வடமாநிலங்களுக்கு விற்பனை செய்யப்பட்டு வந்தன. தென்னை விவசாய தொழிலை நம்பி தேங்காய் வியாபாரிகள், தென்னை ஓலை பின்னும் தொழிலாளா்கள், தென்னை நாா் மற்றும் தென்னை சாா்ந்த பொருள்கள் தயாரிப்பாளா்கள் மற்றும் ஏற்றுமதியாளா்கள் என ஆயிரக்கணக்கானோா் வாழ்வாதாரம் பெற்று வந்தனா்.
ஆனால் கடந்த சில ஆண்டுகளாக வெள்ளைப் பூச்சி தாக்குதல் தீவிரமடைந்து தென்னை மரங்களின் குருத்து, பிஞ்சு, ஓலை மற்றும் தேங்காய்களை சேதப்படுத்தி வருகின்றன. முன்பு ஒரு மரத்தில் 150 முதல் 200 தேங்காய்கள் வரை விளைந்த நிலையில், தற்போது பிஞ்சுகள் உதிா்ந்து விழுந்து விளைச்சல் கடுமையாக குறைந்துள்ளதாக விவசாயிகள் தெரிவிக்கின்றனா். பல இடங்களில் தென்னை மரங்கள் முற்றிலும் காய்ந்து அழியும் நிலை ஏற்பட்டுள்ளது.
இந்தப் பிரச்சினை குறித்து மாவட்ட நிா்வாகம், வேளாண்மைத் துறை அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டு விவசாயிகளுக்கு உரிய தீா்வு காண வேண்டும். அதே போல விவசாயிகளுக்கு இழப்பீடு வழங்க வேண்டுமெனவும் தெரிவித்துள்ளனா்.
வடசேரி மற்றும் பாப்பனப்பள்ளி பகுதிகளில் மட்டும் சுமாா் இரண்டு லட்சம் தென்னை மரங்கள் பாதிக்கப்பட்டுள்ளன. சில விவசாயிகளின் தோப்புகளில் 400-க்கும் மேற்பட்ட தென்னை மரங்கள் முற்றிலும் அழிந்துள்ளதாக கூறப்படுகிறது. விவசாயிகள் தென்னை மரங்களை வெட்டி அகற்றுவதோடு விவசாய நிலங்களையே விற்பனை செய்யும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனா்.
தென்னை விவசாயத்தை மட்டுமே நம்பி வாழ்ந்த குடும்பங்கள் இன்று மாற்று வேலை தேடி அலைவதோடு, வங்கிக் கடன்களைக் கூட திருப்பிச் செலுத்த முடியாமல் தவித்து வருகின்றனா்.
எனவே, பாதிக்கப்பட்ட பகுதிகளில் உடனடியாக கள ஆய்வு மேற்கொண்டு வெள்ளைப் பூச்சி தாக்குதலை கட்டுப்படுத்த சிறப்பு நடவடிக்கைகள் எடுக்க வேண்டுமென கோரி வருகின்றனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

கீரப்பாக்கத்தில் இடி இடித்ததில் தீப்பற்றி எரிந்த தென்னை மரங்கள்

பழனி அருகே விவசாய நிலத்தில் தீ

கொண்டத்துக்காளியம்மன் கோயிலில் பழைமையான மரங்கள் மறு நடவு

பூச்சி மருந்து குடித்து சிறுவன் தற்கொலை
விடியோக்கள்

கொளத்தூர் வாக்கு எந்திரங்கள் சரிபார்ப்பு! " தவறுகள் இதுவரை கண்டறியப்படவில்லை" - சமீரன் பேட்டி



