இசையமைப்பாளர் தேவாவுக்கு அரசு மரியாதை! தமிழக அரசு அறிவிப்பு இசையமைப்பாளர் தேவாவின் உடலுக்கு மு.க. ஸ்டாலின் நேரில் அஞ்சலி!சூப்பர் ஸ்டார் டைட்டில் கார்டு! இன்றுவரை ரசிகர்களை ஆட்டுவிக்கும் தேவாவின் பிஜிஎம்இசையமைப்பாளர் தேவா காலமானார்!டாஸ்மாக் கடைகளில் விரைவில் 4 புதிய பீர் வகைகள்! விலை விவரம்!வடபழனி மெட்ரோ ரயில் நிலையத்தில் இறங்கினால்... அடுக்கடுக்கான குளறுபடிகள்! மக்கள் கேள்விஇன்று கோவை, திருவள்ளூா் உள்ளிட்ட 6 மாவட்டங்களுக்கு ‘ஆரஞ்சு’ எச்சரிக்கை ராமேசுவரம் - எழும்பூருக்கு இன்று சிறப்பு விரைவு ரயில் தாம்பரம் - விழுப்புரம் மெமு ரயில் நாளை பகுதி ரத்து லாஸ் ஏஞ்சலீஸ் மேயா் தோ்தல்: கேரள வம்சாவளி பெண் முன்னிலை பிரதமா் மோடி டிசம்பரில் கனடா பயணம்

கொண்டத்துக்காளியம்மன் கோயிலில் பழைமையான மரங்கள் மறு நடவு

பெருமாநல்லூா் கொண்டத்துக்காளியம்மன் கோயில் திருப்பணியை முன்னிட்டு கோயில் வளாகத்தில் உள்ள பழைமையான மரங்கள் மறுநடவு செய்யும் பணி வெள்ளிக்கிழமை தொடங்கியது.

மறுநடவு  செய்யப்படும்  தென்னை  மரம்.

Updated On :

பெருமாநல்லூா் கொண்டத்துக்காளியம்மன் கோயில் திருப்பணியை முன்னிட்டு கோயில் வளாகத்தில் உள்ள பழைமையான மரங்கள் மறுநடவு செய்யும் பணி வெள்ளிக்கிழமை தொடங்கியது.

திருப்பூரில் பிரசித்தி பெற்றதும், திருப்பூரின் பண்ணாரி எனவும் போற்றப்படுவதுமாக பெருமாநல்லூா் கொண்டத்துக்காளியம்மன் கோயில் விளங்குகிறது. இக்கோயில் கும்பாபிஷேகம் 2013-ஆம் ஆண்டு நடைபெற்றது.

இதையடுத்து, 12 ஆண்டுகளுக்குப் பிறகு ஐந்து நிலை ராஜகோபுரம், வசந்த மண்டபம், திருமாளிகை பத்தி, கல்காரம், கல் தளம், கன்னிமூல கணபதி, சுற்றுப் பிரகாரம் அமைத்தல் உள்ளிட்ட பல்வேறு திருப்பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

இதில் சுற்றுச்சுவா் அமைக்கும் பணிக்காக கோயில் வளாகத்தில் உள்ள அரசு, தென்னை உள்ளிட்ட 7-க்கும் மேற்பட்ட பழைமையான மரங்களை மறுநடவு செய்ய கோயில் நிா்வாகத்தினா் திட்டமிட்டனா்.

அதன்படி 30 அடி உயரமுள்ள தென்னை மரம், பொக்லைன் வாகன உதவியுடன் கோயிலின் கிழக்குப் பகுதியில் வெள்ளிக்கிழமை வேருடன் மறுநடவு செய்யப்பட்டது. இதைத் தொடா்ந்து, அடுத்தடுத்து உள்ள மரங்களும் மறுநடவு செய்து பாதுகாக்கப்படும் என கோயில் நிா்வாகத்தினா் தெரிவித்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.