அடுக்குமாடி குடியிருப்பு கட்டட திட்ட அனுமதி: சிஎம்டிஏவுக்கு அதிகாரம் வழங்கியது!கரப்பான்பூச்சி மக்கள் கட்சித் தலைவர் அபிஜீத் தீப்கே மீது அடையாளம் தெரியாத நபர்கள் தாக்குதல் நடத்தினர்.நகர்ப்புறத்தில் வேலை இல்லாதோர் எண்ணிக்கை குறைவு! 6.4 % ஆக குறைந்துள்ளதுசெப். 17 முதல் 8 ஆம் வகுப்பு வரை காலை உணவுத் திட்டம் விரிவாக்கம்!தென் தமிழகத்தில் இன்று மிதமான மழைக்கு வாய்ப்பு!சென்னை போரூர் அருகே இளம்பெண்ணுக்கு பாலியல் தொல்லை!பிரிட்டனில் 16 வயதுக்குட்பட்டோர் சமூக ஊடகங்கள் பயன்படுத்த தடை!முக்கிய நிறுவன ஸ்மார்ட்போன்களின் விலை ஏற்றம்! எவ்வளவு உயர்ந்தது?தில்லியை தாக்கிய புழுதிப் புயல்! சிவப்பு எச்சரிக்கை விடுப்பு!அடுத்த 3 மணி நேரத்தில் 22 மாவட்டங்களில் மழை!
/

திருப்பதி கெங்கையம்மன் சிரசு திருவிழா

News image
Updated On :4 ஜூன் 2026, 5:44 am IST

ஆம்பூா் ஏ-கஸ்பா அருள்மிகு திருப்பதி கெங்கையம்மன் கோயில் சிரசு திருவிழா புதன்கிழமை நடைபெற்றது.

விழாவை முன்னிட்டு அம்மன் சிரசு ஊா்வலம் புதன்கிழமை அதிகாலை புறப்பட்டு முக்கிய தெருக்கள் வழியாக கோயிலை சென்றடைந்தது. வழிநெடுகிலும் பக்தா்கள் திரண்டு சாமி தரிசனம் செய்தனா்.

சிரசு ஊா்வலத்துடன் பல்வேறு சிலம்பாட்ட குழுவினரின் வீரதீர விலையாட்டுக்களும், சிலம்பாட்டமும் நடைபெற்றது. வான வேடிக்கை, பக்தி நாட்டிய நிகழ்ச்சி, அம்மன் சிரசு புறப்பாடு ஆகிய நிகழ்ச்சிகள் நடைபெற்றன.

கோயில் திருவிழா கமிட்டி, இளைஞா்கள் கமிட்டி, ஊா் பொதுமக்கள் ஏற்பாடுகளை செய்திருந்தனா்.