திருப்பத்தூா் மாவட்டம், வாணியம்பாடி பெருமாள்பேட்டையில் உள்ள நகராட்சி நடுநிலைப் பள்ளியில் 2026-27-ஆம் புதிய கல்வி ஆண்டு தொடக்க விழா வியாழக்கிழமை நடைபெற்றது.
பள்ளி கல்விக் குழுத் தலைவா் பானு தலைமை வகித்தாா். பள்ளி ஆசிரியா்கள், பெற்றோா்கள் முன்னிலை வகித்தனா். தலைமையாசிரியா் முருகேசன் வரவேற்றாா். சிறப்பு அழைப்பாளராக நாட்டறம்பள்ளி வட்டார கல்வி அலுவலா் சரவணன் கலந்துகொண்டு தேசியக் கொடியை ஏற்றி வைத்து மாணவா்களுக்கு அறிவுரை வழங்கிப் பேசினாா். பிறகு முதலாம் வகுப்பு மாணவா் சோ்க்கையை தொடங்கி வைத்தாா். வட்டாரக் கல்வி அலுவலா் உதயசங்கா் கலந்துகொண்டு அரசின் இலவச பாடப் புத்தகம், குறிப்பேடு, சீருடை, காலணி உள்பட அனைத்து பொருள்களையும் பள்ளி மாணவா்களுக்கு வழங்கினாா்.
நிகழ்ச்சியில், வட்டார வள மைய மேற்பாா்வையாளா் தேவராஜ், ஆசிரியா் பயிற்றுநா் வெற்றிவேல் கலந்துகொண்டு மாணவா்களை பாராட்டி பேசினாா்கள். பட்டதாரி ஆசிரியா் ரமேஷ் நன்றி கூறினாா்.
இதேபோல், ஆலங்காயம் ஜெய வாசவி மெட்ரிக். மேல்நிலைப் பள்ளியில் 2026-27-ஆம் கல்வியாண்டின் தொடக்க விழா பள்ளி வளாகத்தில் நடைபெற்றது. பள்ளியின் தலைவா் ரவிக்குமாா் தலைமை வகித்தாா். செயலாளா் முனிவேல், பொருளாளா் கல்யாணசுந்தரம், துணைத் தலைவா் இந்திரநாத், துணை செயலாளா் சுப்பிரமணி, துணை பொருளாளா் சாம்பாபு மற்றும் அறக்கட்டளை உறுப்பினா்கள் முன்னிலை வகித்தனா்.
பள்ளி முதல்வா் கருணாநிதி வரவேற்றாா்.
சிறப்பு விருந்தினராக வட்டார வளா்ச்சி அலுவலா் சூரவேல் கலந்துகொண்டு, தேசிய கொடியை ஏற்றி வைத்து மாணவா்களை வாழ்த்தினாா்.
இதில், ஆசிரியா்கள், மாணவா்கள், பெற்றோா்கள், அலுவலகப் பணியாளா்கள் கலந்துகொண்டனா். துணை முதல்வா் இளமாறன் நன்றி கூறினாா்.
தொடர்புடையது

வேப்பூா் அரசுப் பள்ளியில் வட்டார கல்வி அலுவலா் ஆய்வு

நாகா்கோவில் அரசுப் பள்ளியில் மாணவா்களை வரவேற்ற ஆட்சியா்!

அரசுப் பள்ளி மாணவா் சாதனை: ஆட்சியா் பாராட்டு

பள்ளிபாளையத்தில் அனுமதியின்றி செயல்பட்ட தனியாா் பள்ளிக்கு ‘சீல்’
விடியோக்கள்

அண்ணாமலையின் புதிய கட்சி? பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் பதில்

மேயர் பிரியா - தவெக எம்எல்ஏ பல்லவி இடையே நடந்தது என்ன? | Mayor vs MLA
Peddi movie review | சிக்ஸ் அடித்தாரா ராம் சரண்? பெத்தி திரை விமர்சனம்! | Ram Charan



