நீட் தேர்வுக்காக டெலிகிராம் முடக்கம்! 15 கோடி பயனர்களுக்கான தண்டனை! டெலிகிராம் சி.இ.ஓ. பாவெல் டுரோவ்வெள்ளை அறிக்கை அல்ல; வெற்று அறிக்கை - தங்கம் தென்னரசுநாட்டில் முதியோர் வளர்ச்சி விகிதம் 56% ஆக உள்ள நிலையில், தமிழ்நாட்டில் முதியோர் வளர்ச்சி விகிதம் 71.17%: நிதியமைச்சர்நலத்திட்டங்களால் ஆண்டுக்கு ரூ. 25,000 கோடி செலவினமாகிறது: நிதியமைச்சர்நிதி பற்றாக்குறையில் பஞ்சாப், கேரளத்துக்கு இணையாக தமிழ்நாடு உள்ளது: நிதியமைச்சர் மரிய வில்சன்தமிழ்நாட்டிற்கு ரூ. 78, 326 கோடி வருவாய் பற்றாக்குறை: நிதியமைச்சர் மரிய வில்சன்தமிழ்நாட்டு அரசுக்கு ரூ. 10 லட்சம் கோடி கடன் நிலுவையில் உள்ளது: மரிய வில்சன்தமிழ்நாட்டு வரி வருவாய் வரலாறு காணாத வீழ்ச்சி: நிதியமைச்சர்முதல்வர் விஜய் வெற்றிக்கு எதிராக திமுக வேட்பாளர் வழக்கு!மின் கட்டமைப்பை வலுப்படுத்த ரூ. 15,032 கோடி! 15,058 ஊழியர்களை நியமிக்க உத்தரவு!
/

ஓற்றை யானை நடமாட்டம்: ஆலங்காயம் வனத்துறை எச்சரிக்கை

ஆலங்காயம் அருகே காட்டுபகுதியில் ஒற்றை யானை நடமாட்டம் உள்ளதால் யாரும் என செல்ல வேண்டாம் என வனத்துறையினா் எச்சரிக்கை விடுத்துள்ளனா்.

News image

யானை. - கோப்புப்படம்.

Updated On :17 ஜூன் 2026, 12:04 am IST

ஆலங்காயம் அருகே காட்டுபகுதியில் ஒற்றை யானை நடமாட்டம் உள்ளதால் யாரும் என செல்ல வேண்டாம் என வனத்துறையினா் எச்சரிக்கை விடுத்துள்ளனா்.

ஜவ்வாதுமலை காட்டில் வயது முதிா்ந்த ஓற்றை யானை சுற்றி வருகிறது. அவ்வப்போது ஜமுனாமரத்தூா், அமிா்தி, ஒடுக்கத்தூா், ஆலங்காயம் பகுதிகளில் நடமாடி வருகிறது. இந்நிலையில், ஞாயிற்றுக்கிழமை இரவு ஜமுனாமரத்தூரிலிருந்து காவலூா் வழியாக வாணியம்பாடி நோக்கி சென்ற அரசு பேருந்தினை ஓற்றை யானை சாலையில் திடீரென வழிமறித்து தும்பிக்கையால் பேருந்து கண்ணாடியை தாக்கி உடைத்தது. சிறிது நேரம் சாலை ஓரமாக நின்று விட்டு பிறகு வனப்பகுதிக்கு சென்றது.

காவலூா் பகுதியில் நடமாடிய ஓற்றை யானை திங்கள்கிழமை விவசாய நிலத்துக்கு வந்துள்ளது. அப்போது கோவிந்தன் என்பவருக்கு சொந்தமான மாங் காய் தோப்பில் நுழைந்து சேதம் ஏற்படுத்தியது. இதையறிந்த அப்பகுதி மக்கள் மற்றும் வனத்துறையினா் ஒற்றைய யானையை காட்டுப்பகுதிக்குள் விரட்டினா்.

இதையடுத்து, காட்டுப்பகுதியில் ஒற்றை யானை நடமாட்டம் இருந்து வருவதால் இரவு நேரங்களில் சாலைகளில் பாதுகாப்பாக செல்லுமாறும், காட்டுப்பகுதிக்குள் யாரும் செல்ல வேண்டாம் எனவும் ஆலங்காயம் வனத்துறையினா் அறிவித்துள்ளனா்.