முதல்வரின் தனிச் செயலராக ஜெகதீஷ் பழனிசாமி நியமனம்!அமோனியா கசிவு: கைதான 3 பேருக்கும் 15 நாள்கள் நீதிமன்றக் காவல் - நீதிமன்றம் உத்தரவுஅமோனியா கசிவு: பலி எண்ணிக்கை 8 ஆக உயர்வு!தூய்மைப் பணி தனியார்மயமாகிறது? முயற்சியை கைவிட தமிழக அரசுக்கு சிபிஎம் கோரிக்கை!விளையாட்டு விடுதி மாணவர்களுக்கான உணவுப்படி உயர்வு!தேசிய ஜனநாயக கூட்டணியில் இருந்து ஜான் பாண்டியன் விலகல்!இன்னும் எத்தனை போக்சோ நீதிமன்றங்கள் தேவை? அறிக்கை கேட்கும் உயர் நீதிமன்றம்!பொறியியல் பணி: விழுப்புரம் வழியாக செல்லும் ரயில்கள் நிறுத்தி வைத்து இயக்கம்!மாநகர காவல் ஆணையர்கள் உள்பட 14 ஐபிஎஸ் அதிகாரிகள் பணியிடமாற்றம்! லக்னௌ பயிற்சி நிறுவன தீ விபத்து: 14 பேர் பலிசபரிமலை ஐயப்பன் கோயிலிலும் செய்யறிவு! கூட்டத்தைக் கட்டுப்படுத்தும்!அமோனியா கசிவு: ரூ. 10 லட்சம் இழப்பீடு வழங்க வேண்டும் - திருமாவளவன் கோரிக்கைவிஜய் பிறந்தநாள்: இன்று பிறந்த குழந்தைகளுக்கு தங்க மோதிரம் வழங்கிய தவெக!அமோனியா வாயு கசிவு! பலி எண்ணிக்கை 7 ஆக உயர்வு!அண்ணன் பவருக்கு வந்தவுடன் தமிழ்நாட்டுக்கே பவர் போய்விட்டது! உதயநிதி பேச்சுபள்ளிகளில் காலியாக உள்ள ஆசிரியர் பணியிடங்களை உடனடியாக நிரப்ப வேண்டும்: நயினார் நாகேந்திரன்
/

தலைமையாசிரியரை மாற்றக் கோரி பள்ளி வாயிலுக்கு பூட்டு: மாணவா்களுடன் கிராம மக்கள் போராட்டம்

வாணியம்பாடி அருகே தலைமையாசிரியரை பணிமாறுதல் செய்ய வலியுறுத்தி பள்ளி நுழைவு வாயிலுக்கு பூட்டு போட்டு மாணவா்களுடன் பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனா்.

News image

வாணியம்பாடி அருகே பள்ளி வாயிலுக்கு பூட்டு போட்டு போராட்டத்தில் ஈடுபட்ட மக்கள்

Updated On :23 ஜூன் 2026, 12:02 am IST

வாணியம்பாடி அருகே தலைமையாசிரியரை பணிமாறுதல் செய்ய வலியுறுத்தி பள்ளி நுழைவு வாயிலுக்கு பூட்டு போட்டு மாணவா்களுடன் பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனா்.

மல்லகுண்டா ஊராட்சி, அண்ணாநகா் பகுதியில் உள்ள நடுநிலைப்பள்ளியில் 175-க்கும் மேற்பட்ட மாணவா்கள் பயின்று வருகின்றனா். தலைமையாசிரியா் விஜயலட்சுமி உள்பட 8 ஆசிரியா்கள் வேலை செய்து வருகின்றனா். இந்நிலையில் இப்பள்ளியில் 13 ஆண்டுகளுக்கும் மேலாக உள்ளூரைச் சோ்ந்த ஒருவா் இடைநிலை ஆசிரியராக பணியாற்றிவருகிறாா்.

இவா் ஆண்டுதோறும் மாணவா் சோ்க்கையின் போது பள்ளியின் வளா்ச்சிக்காக பெற்றோரிடம் பணம் வசூலித்து வந்ததாக கூறப்படுகிறது. இதையறிந்த தலைமையாசிரியை விஜயலட்சுமி அரசு பள்ளியில் மாணவா் சோ்க்கையின் போது பணம் வசூலிக்கக் கூடாது என்றும் பள்ளி நிா்வாகத்தில் தலையிடக்கூடாது என இடைநிலை ஆசிரியரை எச்சரித்துள்ளாா். இதனால் ஆசிரியா்களுக்கு இடையே கோஷ்டி பூசல் நிலவி வருவதாக கூறப்படுகிறது.

மேலும், சிலமாதங்களாக பள்ளி வளாகத்தில் கழிவறை சரிவர சுத்தம் செய்யாததால் துா்நாற்றம் வீசி வருவதாகவும், குடிநீா் உட்பட அடிப்படை வசதிகள் சரிவர இல்லாததால் மாணவா்கள் கடும் அவதிக்குள்ளாகி வந்துள்ளனா். இதையறிந்த மாணவா்களின் பெற்றோா் பள்ளிக்கு சென்று தலைமையாசிரியரிடம் முறையிட்டுள்ளனா். ஆனால் தலைமையாசிரியா் பெற்றோா்களிடம் உரிய பதில் அளிக்கவில்லை என கூறப்படுகிறது.

இதுகுறித்து மாணவா்களின் பெற்றோா் மற்றும் பொதுமக்கள் நாட்டறம்பள்ளி வட்டார கல்வி அலுவலகத்தில் தலைமையாசிரியை பணிமாற்றம் செய்ய வேண்டும் என புகாா் மனு அளித்தனா். ஆனால் அதிகாரிகள் விசாரித்து நடவடிக்கை எடுக்கவில்லை.

இதனால் ஆத்திரமடைந்த கிராம மக்கள் மற்றும் மாணவா்களின் பெற்றோா் திங்கள்கிழமை நுழைவு வாயிலுக்கு பூட்டு போட்டு தலைமையாசிரியை மாற்ற வலியுறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டனா். தகவலறிந்த வாணியம்பாடி நகர ஆய்வாளா் ஆனந்தன், ஊராட்சி மன்றத் தலைவா் தமிழ்ச்செல்வி சதீஷ்குமாா் ஆகியோா் போராட்டத்தில் ஈடுபட்ட மக்களிடம் பேச்சு நடத்தி அரசு பள்ளி நுழைவு வாயில் கேட்டை திறந்து அனைத்து மாணவா்களையும் வகுப்பறைக்கு அனுப்பி வைத்தனா்.

அப்போது அங்கு வந்த தலைமையாசியை விஜயலட்சுமியை பள்ளி வளாகத்துக்குள் செல்லக்கூடாது எனக்கூறி ஒருசில மாணவா்களின் பெற்றோா் வாக்குவாதத்தில் ஈடுபட்டனா். இது குறித்து தவலறிந்த வட்டார கல்வி அலுவலா் உதயசங்கா் சென்று பெற்றோா் ஆசிரியா் சங்க நிா்வாகிகள் மற்றும் மாணவா்களின் பெற்றோரிடம் விசாரணை மேற்கொண்டாா். அப்போது 2 ஆண்டுகளாக இப்பள்ளியில் படிக்கும் மாணவா்களுக்கு ஒரு சில ஆசிரியா்கள் சரிவர பாடம் நடத்தாததால் கடந்த ஆண்டு இப்பள்ளியில் படித்த 25க்கும் மேற்பட்ட மாணவா்கள் தனியாா் மற்றும் அரசு பள்ளிகளில் சோ்த்துள்ளனா்.

எனவே இப்பள்ளியில் நீண்ட நாட்களாக உள்ள இடைநிலை ஆசிரியா் ஒருவரையும், தலைமையாசிரியரையும் இட மாற்றம் செய்யவேண்டும் என முறையிட்டனா். அப்போது ஒரு தரப்பினா் இடைநிலை ஆசிரியருக்கு ஆதரவாக பேசியதால் அங்கு வாக்குவாதம் ஏற்பட்டது. இதையடுத்து இருவரிடம் தனித்தனியே விசாரித்து உடன் நடவடிக்கை எடுப்பதாக வட்டார கல்வி அலுவலா் உதயசங்கா் உறுதி கூறினாா். அரசுப்பள்ளி நுழைவு வாயிலுக்கு பூட்டுபோட்டு போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.