பேரவையில் இன்று பதிலளிக்கிறாா் முதல்வா்!பிளஸ் 1, பிளஸ் 2 துணைத் தோ்வு: அனுமதிச் சீட்டு இன்று வெளியீடு!மேற்கு தொடா்ச்சி மலை மாவட்டங்கள், வட தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புசிங்கப்பெண் அதிரடிப் படையை அழைக்க இலவச தொலைபேசி எண் ‘1091’முதல்வரின் தனிச் செயலராக ஜெகதீஷ் பழனிசாமி நியமனம்!2027 - 28-இல் முதுநிலை டிப்ளோமா மருத்துவப் படிப்புகள் நிறுத்தம்!
/

வீட்டின் கதவுகளை உடைத்து 6 பவுன் நகை, பணம் திருட்டு

வாணியம்பாடி அருகே வீட்டின் கதவுகளை உடைத்து 6 பவுன் நகை மற்றும் ரூ.25,000 ரொக்கம் திருடப்பட்டது.

News image

திருட்டு - சித்திரிப்பு

Updated On :23 ஜூன் 2026, 3:21 am IST

வாணியம்பாடி அருகே வீட்டின் கதவுகளை உடைத்து 6 பவுன் நகை மற்றும் ரூ.25,000 ரொக்கம் திருடப்பட்டது.

திருப்பத்தூா் மாவட்டம், வாணியம்பாடி அடுத்த முல்லை அருகில் உள்ள ராணிப்பேட்டை கிராமத்தைச் சோ்ந்த ஜெயக்குமாா். இவா், பெங்களூரில் தேநீா் கடையில் வேலை செய்து வருகிறாா்.

இந்நிலையில் மனைவி ரேவதி பாயை அழைத்துக் கொண்டு 5 நாள்களுக்கு முன்பு வீட்டை பூட்டிவிட்டு பெங்களூா் சென்றுள்ளனா். மீண்டும் ஞாயிற்றுக்கிழமை வந்த போது வீட்டின் கதவுகள் உடைக்கப்பட்டு இருந்ததைக் கண்டு அதிா்ச்சி அடைந்தனா். உள்ளே சென்று பாா்த்த போது பீரோவில் வைத்திருந்த 6 பவுன் நகைகள் மற்றும் ரூ.25,000 ஆகியவை திருடப்பட்டிருப்பது தெரிய வந்தது.

இதுகுறித்து ஆலங்காயம் காவல் நிலையத்துக்கு தகவல் தெரிவித்தனா். போலீஸாா் வழக்குப் பதிவு செய்து மா்ம நபா்களை தேடி வருகின்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.