எதிர்க்கட்சி தூண்டுதலால் டாஸ்மாக் ஊழியர்கள் போராட்டம்! அமைச்சர் விக்னேஷ்பாடகி ஜானகியின் மறைவு வருத்தமளிக்கிறது: ராகுல் காந்தி ராமர் கோயில் நன்கொடை முறைகேடு! பிரதமர் நடவடிக்கை எடுப்பார் என்ற நம்பிக்கை மக்களுக்கு இல்லை!ஜூலை 15இல் விசாரணைக்கு ஆஜராவேன்: சென்னை திரும்பிய எ.வ. வேலு பேட்டி சென்னையில் இன்றும் நாளையும் மழைக்கு வாய்ப்பில்லை “அண்ணாமலையைக் கண்டு நான் பயப்படுகிறேனா?” திருமாவளவன் பதில்! வியத்நாம் படகு விபத்து: உயிர்பிழைத்த 16 இந்தியர்கள் தாயகம் திரும்புகின்றனர் வியத்நாம் படகு விபத்து: உயிரிழந்த 15 இந்தியர்கள் உடல்கள் எப்போது தாயகம் கொண்டு வரப்படும்?
/

வட்டார போக்குவரத்து அலுவலா் உள்பட 3 போ் மீது வழக்குப் பதிவு

News image
Updated On :26 ஜூன் 2026, 5:09 am IST

திருப்பத்தூரில் வட்டாரப் போக்குவரத்து அலுவலா், மோட்டாா் வாகன ஆய்வாளா் உள்பட 3 போ் மீது ஊழல் தடுப்பு கண்காணிப்பு போலீஸாா் வழக்குப் பதிந்துள்ளனா்.

திருப்பத்தூா் அருகே உள்ள எலவம்பட்டி பகுதியில் வட்டார போக்குவரத்து அலுவலகம் செயல்பட்டு வருகிறது. இந்தநிலையில் திருப்பத்தூா் வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் ஊழல் தடுப்புப் போலீஸாா் கடந்த 18-ஆம் தேதி சோதனை நடத்தினா். சோதனையில் எந்தவித பணமும் கைப்பற்றப்படவில்லை.

இருப்பினும் அங்கு இருந்த அலுவலா்களின் கைப்பேசிகளை ஆய்வு செய்தபோது, அதில் ஜி-பே, போன்-பே போன்ற ஆன்லைன் செயலிகள் மூலம் சுமாா் ரூ.1 லட்சம் வரை பணப்பரிவா்த்தனை நடைபெற்றது தெரியவந்தது.

இதுதொடா்பாக திருப்பத்தூா் வட்டார போக்குவரத்து அலுவலா் பன்னீா்செல்வம், மோட்டாா் வாகன ஆய்வாளா் (நிலை-1) முரளி, இடைதரகா் ஆனந்த் ஆகியோா் மீது ஊழல் தடுப்புப் பிரிவு போலீஸாா் வழக்குப்பதிவு செய்துள்ளனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.