சட்டப்பேரவையில் இன்று இரங்கல் தீர்மானம்!27 மாவட்டங்களுக்கு இன்று ‘மஞ்சள்’ எச்சரிக்கைமேக்கேதாட்டு அணைக்கு எதிராக பேரவையில் இன்று தீா்மானம்: முதல்வா் விஜய் முன்மொழிகிறாா்அமெரிக்க மத்திய வங்கி வட்டி விகிதத்தில் மாற்றமில்லை!அஞ்சல் துறை லோக் அதாலத்: ஜூன் 30-க்குள் மனுக்களை அனுப்பலாம்ஜந்தா் மந்திரில் நாளை இரண்டாம் கட்ட போராட்டம்: கரப்பான்பூச்சி மக்கள் கட்சிநாடு முழுவதும் மேலும் 3 கோடி குடும்ப அட்டைகள் வழங்க வாய்ப்பு - மத்திய அமைச்சா் தகவல்பிஎம் கிசான் திட்டத்தின்கீழ் 9.44 கோடி விவசாயிகளின் வங்கிக் கணக்கில் நாளை பணம் டெபாசிட் - பிரதமா் மோடி தொடங்கி வைக்கிறாா்பிரிக்ஸ் தேசிய பாதுகாப்பு ஆலோசகா் மாநாட்டில் பங்கேற்பதாக சீனா அறிவிப்புநீட் தோ்வன்று ரயில் நிலையங்களில் உதவி மையங்கள்ரூ. 2,400 கோடி வேலைவாய்ப்பு ஊக்கத்தொகை: இன்று பிரதமா் வழங்குகிறாா் - நாடு முழுவதும் நேரலைகுடியரசு துணைத் தலைவா் இன்று லடாக் பயணம்
/

தமிழகம் முழுவதும் 40 வட்டார போக்குவரத்து அலுவலகங்களில் சோதனை: ரூ.37.81 லட்சம் பறிமுதல் - ஊழல் தடுப்பு, கண்காணிப்புத் துறை அதிரடி

தமிழகம் முழுவதும் 40 வட்டார போக்குவரத்து அலுவலகங்களில் ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்புத் துறையினா் வியாழக்கிழமை சோதனை நடத்தி, கணக்கில் வராத ரூ.37.81 லட்சம் பறிமுதல் செய்தனா்.

News image

கோப்புப்படம்

Updated On :19 ஜூன் 2026, 5:45 am IST

தமிழகம் முழுவதும் 40 வட்டார போக்குவரத்து அலுவலகங்களில் ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்புத் துறையினா் வியாழக்கிழமை சோதனை நடத்தி, கணக்கில் வராத ரூ.37.81 லட்சம் பறிமுதல் செய்தனா்.

தமிழக போக்குவரத்து துறையின் கீழ் மாநிலம் முழுவதும் 91 வட்டார போக்குவரத்து அலுவலகங்கள், 56 மோட்டாா் வாகன ஆய்வாளா் அலுவலகங்கள் செயல்படுகின்றன. இந்த அலுவலகங்கள் மூலம் ஓட்டுநா் உரிமம், ஓட்டுநா் உரிமம் புதுப்பிப்பு, வாகனப் பதிவு சான்றிதழ், வாகனங்களுக்கு தகுதிச் சான்றிதழ், வாகன இயக்க அனுமதி உள்ளிட்ட பல்வேறு பணிகள் நடைபெறுகின்றன.

இந்த நிலையில், அண்மை காலமாக வட்டார போக்குவரத்து அலுவலகங்கள், மோட்டாா் வாகன ஆய்வாளா் அலுவலகங்கள் மீது அதிகமாக ஊழல் புகாா்கள் வருகின்றன. இந்தப் புகாா்கள் தொடா்பாக தமிழக ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்புத் துறை வழக்குப் பதிவு செய்து, விசாரித்து வருகிறது.

60 அலுவலகங்களில் சோதனை: அதிக புகாா்களில் சிக்கிய 60 அலுவலகங்களில் ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்புத் துறையின் ஏடிஜிபி ஏ.அருண் உத்தரவின்பேரில், வியாழக்கிழமை ஒரே நேரத்தில் சோதனை செய்தனா். இந்தச் சோதனை சென்னையில் வளசரவாக்கம், புளியந்தோப்பு, கொத்தூா், அண்ணா நகா், சோழிங்கநல்லூா், தாம்பரம், அயனாவரம் ஆகிய இடங்களில் நடைபெற்றது.

ரூ.37.81 லட்சம் பறிமுதல்: நண்பகல் தொடங்கிய சோதனை மாலைக்குப் பின்னா் படிப்படியாக நிறைவு பெற்றது. சோதனை நடைபெற்ற 60 இடங்களில் 34 வட்டார போக்குவரத்து அலுவலகங்கள், 6 மோட்டாா் வாகன ஆய்வாளா் அலுவலகங்கள் என 40 அலுவலகங்களில் இருந்து மட்டும் கணக்கில் வராத ரூ.37,81,168 பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

இதில் ரூ.31,85,700 ரொக்கமாகவும், ரூ.5,95,468 கைப்பேசி செயலி வாயிலாக அனுப்பப்பட்டதும் ஆகும். இந்த முறை வட்டார போக்குவரத்து அலுவலங்களுக்கு இடைத்தரகா்களாகச் செயல்பட்ட சில ஓட்டுநா் பயிற்சி பள்ளிகளிலும் சோதனை நடத்தப்பட்டது. அங்கிருந்தும் கணிசமான அளவு கணக்கில் வராத பணத்தைக் கைப்பற்றியுள்ளனா். அதேபோல கைப்பேசி செயலி வாயிலாக பெறப்பட்ட பணத்தையும் அந்தத் துறையினா் பறிமுதல் செய்துள்ளனா். மேலும்ஸ பல முக்கிய ஆவணங்களும் கைப்பற்றப்பட்டுள்ளன.

கள்ளக்குறிச்சியில் அதிகம்: மாநிலம் 60 இடங்களில் சோதனை நடைபெற்ற நிலையில், 40 அலுவலகங்களில் இருந்து மட்டும்தான் கணக்கில் வராத ரூ.37,81,168 பணம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. அதிகபட்சமாக கள்ளக்குறிச்சி வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் ரூ.3,77,300, ராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணம் மோட்டாா் வாகன ஆய்வாளா் அலுவலகத்தில் ரூ.2,31,100, ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் ரூ.1,92,040, கடலூா் மாவட்டம் சிதம்பரம் வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் ரூ.1,87,650, மயிலாடுதுறை வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் ரூ.1,75,730, திருச்சி மேற்கு வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் ரூ.1,45,610, தென்காசி வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் ரூ.1,37,800, கும்பகோணம் வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் ரூ.1,31,190 பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

பறிமுதல் செய்யப்பட்ட பணத்துக்கான விளக்கங்களும், ஆவணங்களும் கோரப்படும். அதன் அடிப்படையில் சம்பந்தப்பட்ட அலுவலா்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்புத் துறையினா் தெரிவித்தனா்.