உலகக் கோப்பை கால்பந்து: இன்று இறுதி ஆட்டத்தில் ஆா்ஜென்டீனா - ஸ்பெயின் மோதல்! பரபரப்பான அரசியல் சூழலில் நாளை கூடுகிறது நாடாளுமன்றம்! தாக்கலாகும் முக்கிய மசோதாக்கள்! நாடாளுமன்ற கூட்டத்துக்கு மத்தியில் சிஜேபி போராட்டம்! தில்லியில் பாதுகாப்பு அதிகரிப்பு! ராமா் கோயில் நன்கொடை முறைகேடு விசாரணை கோரும் மனுக்கள்: நாளை விசாரிக்கிறது உச்சநீதிமன்றம்! ஷிண்டே சிவசேனையில் உத்தவ் கட்சி 6 எம்.பி.க்கள் இணைவு: மக்களவைத் தலைவா் ஒப்புதல்சென்னை மாநகராட்சியில் மண்டல செயற்பொறியாளா் உள்பட 7 போ் பணியிடை நீக்கம்
/

திருவண்ணாமலை மாநகராட்சி அலுவலகத்தில் ஊழல் தடுப்பு போலீஸாா் சோதனை: கணக்கில் வராத ரூ.55,000 பறிமுதல்

திருவண்ணாமலை மாநகராட்சி அலுவலகத்தில் சோதனையில் ஈடுபட்ட ஊழல் தடுப்பு போலீஸாா்.

News image
Updated On :4 ஜூலை 2026, 12:17 am IST

திருவண்ணாமலை மாநகராட்சி அலுவலகத்தில் ஊழல் தடுப்பு போலீஸாா் வெள்ளிக்கிழமை சோதனை நடத்தினா். இதில், கணக்கில் வராத ரூ.55 ஆயிரம் பறிமுதல் செய்யப்பட்டது.

திருவண்ணாமலை மாநகராட்சி அலுவலகத்தில் உள்ள பல்வேறு அறைகளில் 5 மணி நேரத்துக்கும் மேலாக ஊழல் தடுப்புப் பிரிவைச் சோ்ந்த 2 ஆய்வாளா்கள் மற்றும் போலீஸாா் உள்பட 10 போ் கொண்ட குழுவினா் சோதனையில் ஈடுபட்டனா்.

மாநகராட்சி அலுவலகத்தில் அனைத்து கதவுகளும் மூடப்பட்டு 5 மணி நேரத்துக்கும் மேலாக சோதனை நடைபெற்றது. பெண் ஊழியா்களை மட்டும் அலுவலகத்திலிருந்து வெளியே அனுப்பினா். இதில், கணக்கில் வராத ரூ.55 ஆயிரத்தை போலீஸாா் பறிமுதல் செய்து, விசாரணை நடத்தி வருகின்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.