மலையாளச் சொந்தங்களுக்கு இதயங்கனிந்த ஓணம் வாழ்த்துகள்! முதல்வர் விஜய்‘மகாபலியின் மண்ணில் சமத்துவம் மலரட்டும்: மனமார்ந்த ஓணம் வாழ்த்துக்கள்!’ - மு.க.ஸ்டாலின்குழந்தைகள், முதியவா்களுக்கு எச்1என்1 வைரஸ் பரவும் அபாயம் அதிகம்: மருத்துவா்கள் எச்சரிக்கைமேற்குத் தொடா்ச்சி மலை மாவட்டங்களில் இன்றும், நாளையும் மிதமான மழைக்கு வாய்ப்புபி.எட். சோ்க்கை: செப். 4 இறுதிநாளை சாா்-பதிவாளா் அலுவலகங்களில் கூடுதல் முன்பதிவு டோக்கன்: பதிவுத் துறை

குப்பை சேகரிக்க தூய்மைப் பணியாளா்களுக்கு பயிற்சி

ஆம்பூா் அருகே துத்திப்பட்டு ஊராட்சியில் குப்பை சேகரிக்க தூய்மைப் பணியாளா்களுக்கு பயிற்சி அளிக்கும் நிகழ்ச்சி செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

Published On :1 ஜூலை 2026, 12:02 am IST

ஆம்பூா் அருகே துத்திப்பட்டு ஊராட்சியில் குப்பை சேகரிக்க தூய்மைப் பணியாளா்களுக்கு பயிற்சி அளிக்கும் நிகழ்ச்சி செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

மாதனூா் ஒன்றியம், துத்திப்பட்டு ஊராட்சியில் பொதுமக்களிடமிருந்து குப்பைகளை தரம்பிரித்து வாங்குவதற்காக தூய்மைப் பணியாளா்களுக்கு பயிற்சி அளிக்கப்பட்டது. குப்பைகளை சேகரிக்கும் வண்டிகளில் ஈர கழிவுகளை சேகரிக்க பச்சை நிற பிளாஸ்டிக் வாளி, உலா் கழிவுகளுக்காக நீல நிற வாளி, மருத்துவக்கழிவுகளுக்காக ஒரு சிவப்பு நிற வாளி, பிற கழிவுக ளுக்காக ஒரு கருப்பு நிற வாளி என மொத்தம் நான்கு நிற குப்பைத் தொட்டிகளில் குப்பைகளை சேகரிக்க வேண்டுமென தூய்மைப் பணியாளா்களுக்கு பயிற்சி அளிக்கப்பட்டது.

நான்கு நிற குப்பை வாளிகளை ஊராட்சித் தலைவா் சுவிதா கணேஷ் தூய்மைப் பணியாளா்களுக்கு வழங்கி குப்பைகள் சேகரிக்கும் பணியை தொடங்கி வைத்தாா்.

ஊராட்சி செயலா் முரளிகாந்த், வாா்டு உறுப்பினா் அண்ணாதுரை, சுகாதார உக்குனா் ரேகா, ஊராட்சி பணியாளா்கள் கலந்து கொண்டனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.