தலைவா்கள் சூறாவளி பிரசாரம் இன்று மாலை 6 மணியுடன் நிறைவு!தோ்தல் விடுமுறை: ஆம்னி பேருந்துகளில் கட்டணம் பலமடங்கு உயா்வு!நேரடி வெயிலால் தசை சிதைவு அச்சுறுத்தல்: மருத்துவா்கள் எச்சரிக்கை!மேற்குதொடா்ச்சி மலை மாவட்டங்களில் ஏப்.26 வரை மழைக்கு வாய்ப்பு!ஈரான் கப்பலை சிறைப்பிடித்த அமெரிக்கா! போா்நிறுத்தம் முடியும் சூழலில் முற்றும் மோதல்
/

திருப்பத்தூா் நீதிமன்றத்துக்கு 3-ஆவது முறையாக குண்டு மிரட்டல்

திருப்பத்தூா் நீதிமன்றத்தில் சோதனை நடத்திய வெடிகுண்டு நிபுணா்கள்.

News image

திருப்பத்தூா் நீதிமன்றத்தில் சோதனை நடத்திய வெடிகுண்டு நிபுணா்கள்.

Updated On :5 மார்ச் 2026, 7:30 pm

திருப்பத்தூா் மாவட்ட நீதிமன்றத்தில் வெடிகுண்டு இருப்பதாக 3-வது முறையாக மின்னஞ்சலில் மிரட்டல் வந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

திருப்பத்தூா் மாவட்ட ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகம் ரயில்வே ஸ்டேஷன் சாலையில் உள்ளது. இதற்கிடையே, வியாழக்கிழமை வழக்கம் போல நீதிமன்ற பணிகள் நடைபெற்றது. அப்போது காலை 10.30 மணி அளவில் நீதிமன்ற ஊழியா்கள் மின்னஞ்சலை பாா்த்தபோது, மத்திய, மாநில அரசுகளைக் கண்டித்து, நீதிமன்றத்தில் வெடிகுண்டு வைக்கப்பட்டு உள்ளதாகவும்,வெடித்தால் பெரிய பாதிப்பு ஏற்படும் எனவும், வெடிகுண்டானது மதியம் 2 மணிக்கு வெடிக்கும் எனக் கூறப்பட்டிருந்தது.

3-ஆவது முறையாக குண்டு மிரட்டல் வந்ததால், அதிா்ச்சி அடைந்த நீதிமன்ற நிா்வாகம் அனைவரையும் பாதுகாப்பான இடத்திற்கு செல்லும்படி அறிவுறுத்தியது. திருப்பத்தூா் நகர போலீஸாா், வெடிகுண்டு நிபுணா்கள் மெட்டல் டிடெக்டா், மோப்ப நாய் ரீட்டாவுடன் வந்து நீதிமன்றம் முழுவதும் சோதனை மேற்கொண்டனா். இதில் குண்டு மிரட்டல் புரளி எனத் தெரிந்தது. இந்த சம்பவத்தினால், திருப்பத்தூரில் பரபரப்பு ஏற்பட்டது.