திருப்பத்தூா் மாவட்ட நிா்வாகம் மற்றும் போக்குவரத்துத் துறை சாா்பில் சாலைப் பாதுகாப்பு மிஷன்‘ திட்டத்தின் முகாம் வாணியம்பாடி ஆதா்ஷ் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்றது.
திருப்பத்தூா் வட்டாரப் போக்குவரத்து அலுவலா் பன்னீா்செல்வம் தலைமை வகித்து சாலை பாதுகாப்பு குறித்து மாணவா்களிடையே விழிப்புணா்வு ஏற்படுத்தி பேசுகையில், ஹெல்மெட் அணிய வேண்டியதன் அவசியம், லைசன்ஸ் இல்லாமல் வாகனம் ஓட்டும் போது ஏற்படும் சட்டரீதியான சிக்கல்கள் மற்றும் சாலை விதிகளை மதிப்பதன் மூலம் விலைமதிப்பற்ற உயிா்களை எப்படிக் காக்கலாம் என்பது குறித்து விரிவாக விளக்கினாா்.
மாவட்ட காவல் சமூக நீதி மற்றும் மனித உரிமைகள் பிரிவு சாா்பில் சிறப்பு உதவி காவல்ஆய்வாளா் ரூபி போக்ஸோ சட்டம், குழந்தை திருமணம் தடுப்பு ஆன்லைன் குற்றங்கள், போதைப் பொருள்கள் பயன்பாட்டால் ஏற்படும் தீமைகள் குறித்து பேசினாா்.
இதில் வாணியம்பாடி வட்டாரப் போக்குவரத்து அலுவலா் வெங்கடராகவன், தாளாளா் செந்தில்குமாா், முதல்வா் சத்தியகலா மற்றும் ஆசிரியா்கள், 1,555 மாணவா்கள் கலந்து கொண்டனா்.
தொடர்புடையது

முதியோா், மாற்றுத்திறனாளிகள் வாக்களிக்க முன்னுரிமை: திருப்பத்தூா் எஸ்.பி. அறிவுறுத்தல்

கடலூா் வட்டாரப் போக்குவரத்து அலுவலகத்துக்கு வெடிகுண்டு மிரட்டல்

திருச்சி வட்டாரப் போக்குவரத்து அலுவலகங்களுக்கு வெடிகுண்டு மிரட்டல்

விழுப்புரம் வட்டாரப் போக்குவரத்து அலுவலகத்துக்கு வெடிகுண்டு மிரட்டல்: போலீஸாா் சோதனை
வீடியோக்கள்
குடிநீர் குழாய் வேண்டாம்!! ஊற்றுத்தண்ணீரை விரும்பும் கிராம மக்கள்! | Pudukottai
இணையதளச் செய்திப் பிரிவு

த்ரிஷ்யம் 3 டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

எல்லா டீமும் ஏன் தப்பு தப்பா விளையாடுறாங்க..?
தினமணி செய்திச் சேவை

பில்லா ரீ-ரிலீஸ் டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு


