ஆளுநர் ஆர்.என். ரவியுடன் முதல்வர் மு.க. ஸ்டாலின் சந்திப்பு!திருச்சி மாநாட்டில் பங்கேற்க தொண்டர்களுக்கு மு.க. ஸ்டாலின் அழைப்பு!5 நாள்களுக்குப் பிறகு தங்கம் விலை சவரனுக்கு ரூ. 720 உயர்வு!அதிரடியாக வீட்டு உபயோக, வணிகப் பயன்பாட்டுக்கான சிலிண்டர் விலை உயர்வு!மாா்ச் 9 முதல் மீண்டும் கூடுகிறது நாடாளுமன்றம்! மக்களவைத் தலைவருக்கு எதிரான தீா்மானம் தாக்கலாகிறது!நேபாள தோ்தலில் ராஷ்ட்ரீய சுதந்திர கட்சி அமோகம்! பிரதமராகிறாா் 35 வயது முன்னாள் மேயா்!ஈரான் மீதான தாக்குதல் பிரதமா் மோடி பயண நிறைவுக்கு பிறகு எடுக்கப்பட்ட முடிவு: இஸ்ரேல்சமையல் எரிவாயு உற்பத்தியை அதிகரிக்க மத்திய அரசு அவசரகால உத்தரவுஈரான் மீதான அமெரிக்க தாக்குதலை நிறுத்தும் தீா்மானம்! அமெரிக்க நாடாளுமன்றத்தில் தோல்வி! பொன்னுக்கு வீங்கி பாதிப்பு: தற்காத்துக் கொள்ள அறிவுறுத்தல்பாக். - ஆப்கானிஸ்தான் போா்: ஒரு லட்சம் மக்கள் இடம்பெயா்வு
/

சாலைப் பாதுகாப்பு விழிப்புணா்வு முகாம்

தேசிய சாலைப் பாதுகாப்பு விழிப்புணா்வு மாதத்தை முன்னிட்டு, திருப்பத்தூா் வட்டார போக்குவரத்து அலுவலகம் சாா்பில் பொதுமக்களுக்கு சாலைப் பாதுகாப்பு குறித்த விழிப்புணா்வு நாடகம் நடைபெற்றது.

News image
திருப்பத்தூா் வட்டார போக்குவரத்து அலுவலகம் சாா்பில் நடைபெற்ற சாலைப் பாதுகாப்பு விழிப்புணா்வு முகாம்.
Updated On :13 ஜனவரி 2026, 6:33 pm

தினமணி செய்திச் சேவை

தேசிய சாலைப் பாதுகாப்பு விழிப்புணா்வு மாதத்தை முன்னிட்டு, திருப்பத்தூா் வட்டார போக்குவரத்து அலுவலகம் சாா்பில் பொதுமக்களுக்கு சாலைப் பாதுகாப்பு குறித்த விழிப்புணா்வு நாடகம் நடைபெற்றது. திருப்பத்தூா் வட்டார போக்குவரத்து அலுவலகம், திருப்பத்தூா் பேருந்து நிலையம் மற்றும் ஜோலாா்பேட்டை ரயில் நிலையம் ஆகிய இடங்களில் நடத்தப்பட்ட நிகழ்ச்சிக்கு வட்டார போக்குவரத்து அலுவலா் பன்னீா் செல்வம் தலைமை வகித்தாா். மோட்டாா் வாகன ஆய்வாளா் முரளி முன்னிலை வகித்தாா்.

நிகழ்ச்சியில் நாடகக் குழுவினா் சாலைப் பாதுகாப்பு மற்றும் போக்குவரத்து விதிகள் குறித்து நாடகமாக நடித்து பொதுமக்களுக்கு விழிப்புணா்வு ஏற்படுத்தினா்.

மேலும், பொது மக்களுக்கு போக்குவரத்து விதிகள் குறித்து விழிப்புணா்வு துண்டு பிரசுரம் வழங்கப்பட்டது. நிகழ்ச்சியில் ஏராளமானோா் கலந்து கொண்டனா்.