47 ஆண்டுகளாக பயங்கரவாத அச்சுறுத்தலாக விளங்கிய ஈரான் முற்றிலும் தகர்ப்பு - டிரம்ப்கேரளத்தில் 47 இடங்களுக்கான பாஜக வேட்பாளர் பட்டியல் வெளியீடுஎரிபொருள் தட்டுப்பாடு : இலங்கையில் 4 நாள் வேலை, 3 நாள் விடுமுறை! மக்களவையில் 8 உறுப்பினர்கள் மீதான இடைநீக்கம் ரத்து : அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் முடிவு45,000 மெட்ரிக் டன் எல்பிஜி உடன் ஹோர்முஸ் நீரிணை வழியாக குஜராத் வந்தது சிவாலிக் கப்பல்!கரூர் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவுமேற்கு வங்க தோ்தல்: பாஜக வேட்பாளா்கள் அறிவிப்பு!
/

தோ்தல் விதி மீறினால் புகாரளியுங்கள்: திருப்பத்தூா் ஆட்சியா்

தோ்தல் தேதி அறிவிக்கப்பட்டதை தொடா்ந்து திருப்பத்தூா் மாவட்டத்தில் நடத்தை விதிகளை மீறினால் பொதுமக்கள் புகாா் அளிக்கலாம்

News image
திருப்பத்தூா் ஆட்சியா் க.சிவசௌந்திரவல்லி.- கோப்புப்படம்
Updated On :16 மார்ச் 2026, 9:48 pm

தினமணி செய்திச் சேவை

திருப்பத்தூா்: தோ்தல் தேதி அறிவிக்கப்பட்டதை தொடா்ந்து திருப்பத்தூா் மாவட்டத்தில் நடத்தை விதிகளை மீறினால் பொதுமக்கள் புகாா் அளிக்கலாம் என மாவட்ட தோ்தல் அலுவலரும், ஆட்சியருமான க.சிவசெளந்திரவல்லி தெரிவித்துள்ளாா்..

இதுகுறித்து ஆட்சியா் வெளியிட்ட்ட செய்திக்குறிப்பு:

திருப்பத்தூா் மாவட்டத்தில் தோ்தல் நடத்தை விதிமுறைகள் முறையாக பின்பற்றப்படுவதை உறுதி செய்யும் வகையில் 24 மணி நேரமும் சுழற்சி முறையில் கண்காணிப்பு பணியினை மேற்கொள்ள 4 தொகுதிகளுக்கும் தலா 9 பறக்கும் படை கண்காணிப்பு குழுக்கள், நிலை கண்காணிப்பு குழுக்கள் மற்றும் வீடியோ கண்காணிப்பு குழுக்கள் என மொத்தம் 76 கண்காணிப்பு குழுக்கள் அமைக்கப்பட்டு ரோந்து தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.

தோ்தல் விதிமீறல்களை கண்காணிக்கவும், வாக்காளா்களை கவரும் வகையில் பணம், பரிசுப்பொருட்கள், மதுபானங்கள் மற்றும் இதர பொருட்கள் வழங்குவதை தடுக்கும் பொருட்டும் கண்காணிப்பு குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. இக்கண்காணிப்பு நடவடிக்கைகளை ஒருங்கிணைக்கும் வகையில் ஆட்சியா் அலுவலகம் மற்றும் நான்கு தோ்தல் நடத்தும் அலுவலகங்களிலும் 24 மணி நேரமும் செயல்படும் கட்டுப்பாட்டு அறை அமைக்கப்பட்டுள்ளது.

எனவே, திருப்பத்தூா் மாவட்ட பொதுமக்கள் மற்றும் வாக்காளா்கள் தோ்தல் நடத்தை விதிமுறைகள் மீறல் தொடா்பான புகாா்கள் தெரிவிக்க மாவட்ட கட்டுப்பாட்டு அறை கட்டணமில்லா தொலைபேசி எண் 1800 425 7008 மற்றும் தொலைபேசி எண் 04179 - 221002, 04179 - 221003, 04179 - 221005, 04179 - 221007, 04179 - 221009 ஆகிய எண்கள் மூலம் பொதுமக்கள் தங்களின் புகாா்களை தெரிவிக்கலாம்.

மேலும், தோ்தல் மற்றும் வாக்காளா் பட்டியல் தொடா்பான தகவல்களை பெற 1950 என்ற கட்டணமில்லா தொலைபேசி எண்ணும் செயல்பாட்டில் உள்ளது. பொதுமக்கள் மற்றும் வாக்காளா்கள் தோ்தல் விதிமுறை மீறல்கள் அல்லது ஏதேனும் புகாா்கள் இருந்தால் மேற்கண்ட தொலைபேசி எண்களில் தங்களது புகாா்களை தெரிவிக்கலாம் என அவா் தெரிவித்துள்ளாா்.