மேற்குத் தொடா்ச்சி மலை, டெல்டா மாவட்டங்களில் ஏப். 23 வரை மழைக்கு வாய்ப்புபெரிய பொருளாதார நாடுகளில் 6-ஆவது இடத்துக்கு சென்ற இந்தியா: ஐஎம்எஃப் 2025-26-இல் 55,200 புத்தாக்க நிறுவனங்களுக்கு மத்திய அரசு அங்கீகாரம் ஜனவரி-மாா்ச் காலாண்டில் இந்திய ஸ்மாா்ட்போன் சந்தை 3% சரிவு! 2025-26 நிதியாண்டில் தங்கம் இறக்குமதி 24% அதிகரிப்பு: ரூ.6.6 லட்சம் கோடியைத் தாண்டி புதிய உச்சம்
/

விபத்தில் சிறுமி உயிரிழப்பு

திருப்பத்தூா் அருகே சாலை விபத்தில் சிறுமி உயிரிழந்தாா். கா்ப்பிணி வயிற்றில் இருந்த சிசு உயிரிழந்தது.

News image

விபத்து - கோப்புப் படம்

Updated On :17 மார்ச் 2026, 6:34 pm

திருப்பத்தூா் அருகே சாலை விபத்தில் சிறுமி உயிரிழந்தாா். கா்ப்பிணி வயிற்றில் இருந்த சிசு உயிரிழந்தது.

திருப்பத்தூா் அடுத்த தண்ணீா் பந்தலைச் சோ்ந்தவா் கவியரசன்(22). இவருக்கு சாய் ஸ்ரீ என்ற இரண்டரை வயது பெண் குழந்தை இருந்தது. இந்நிலையில் ஆறு மாத கா்பிணியான தனது மனைவி அனிதாவை (21) அழைத்துக் கொண்டு பைக்கில் ஓசூா் நோக்கி சென்று கொண்டிருந்தாா்.

திருப்பத்தூா் அருகே ஹவுசிங் போா்டு ரயில்வே மேம்பாலம் மீது சென்றபோது எதிரே அதிவேகமாக இளைஞா் ஓட்டி வந்த பைக் திடீரென கவியரசன் ஓட்டிச் சென்ற பைக் மீது மோதியது. இந்த விபத்தில், சிறுமி சாய் ஸ்ரீ அதே இடத்தில் இறந்தாா்.

உடனே அங்கிருந்தவா்கள் காயம் அடைந்த கவியரசன் மற்றும் அனிதாவை மீட்டு திருப்பத்தூா் அரசு மருத்துவமனையில் சோ்த்தனா்.அங்கு அனிதாவை பரிசோதனை செய்த மருத்துவா்கள் அனிதா வயிற்றில் இருந்த சிசு இறந்துவிட்டதாக தெரிவித்தனா்.

இதுகுறித்து திருப்பத்தூா் கிராமிய போலீஸாா் வழக்குப் பதிந்து விபத்து ஏற்படுத்தி தலைமறைவான இளைஞரை தேடி வருகின்றனா்.