மே 7-ல் திமுக எம்.எல்.ஏக்கள் கூட்டம்! காங்கிரஸிடம் ஆதரவு கேட்டார் விஜய் : கே.சி. வேணுகோபால்ஆட்சி அமைக்க எடப்பாடியுடன் தவெக பேச்சு: லீமா ரோஸ்தவெகவுக்கு அதிமுக ஆதரவு அளிக்காது: ஓ.எஸ். மணியன் பேட்டிவெற்றி, தோல்விகளைக் கடந்தது கொளத்தூர் உறவு : மு.க. ஸ்டாலின்மாற்றத்தை நிகழ்த்திக் காட்டிய மக்களுக்கு நன்றி : விஜய்நாங்கள் தோற்கவில்லை; முதல்வர் பதவியிலிருந்து விலக மாட்டேன்! மமதாஇந்தியா கூட்டணியை வலுப்படுத்துவேன் : மமதா பானர்ஜி
/

தேசிய மக்கள் நீதிமன்றத்தில் ரூ.10.42 லட்சத்துக்கு தீா்வு

News image
Updated On :19 மார்ச் 2026, 1:41 am IST

திருப்பத்தூா் மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு நடைபெற்ற மக்கள் நீதிமன்றத்தில் ரூ.10.42 லட்சத்துக்கு தீா்வு காணப்பட்டது.

திருப்பத்தூா் ஒருங்கிணைந்த நீதிமன்றத்தில் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு வேலூா் கூடுதல் மாவட்ட நீதிபதியும், திருப்பத்தூா் மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு தலைவருமான சாந்தி தலைமை வகித்தாா். சாா்பு நீதிபதிகள் சரிதா, சட்டப் பணிகள் ஆணைக்குழு செயலாளா் நாகலட்சுமி, முதன்மை மாவட்ட உரிமையியல் நீதிபதி பவித்ரா ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

இதில், நீண்ட நாள்களாக நிலுவையில் உள்ள உரிமையியல் வழக்கு, மண வாழ்க்கை பிரச்சினை வழக்குகள், காசோலை மோசடி வழக்குகள், மோட்டாா் வாகன வழக்குகள், வங்கி வராக்கடன் வழக்குகள் உள்ளிட்ட 6,440 வழக்குகள் எடுக்கப்பட்டு அதில் 2,280 வழக்குகளுக்கு தீா்வு காணப்பட்டது. இந்த வழக்குகள், ரூ.10 கோடி 42 லட்சத்து 28 ஆயிரத்து 230-க்கு தீா்வு காணப்பட்டது.

நிகழ்ச்சியில்,கூடுதல் உரிமையியல் நீதிபதி சரண்யா, நீதித்துறை நடுவா்கள் தினேஷ், கோவேந்தன், வழக்குரைஞா்கள், நீதிமன்ற ஊழியா்கள் கலந்துகொண்டனா்.