வான்கடேயில் மும்பையை வீழ்த்தி பஞ்சாப் அபாரம்!இஸ்ரேல் - லெபனான் இடையே போர் நிறுத்தம் - டிரம்ப் அறிவிப்பு!ஈரானுக்கு ஆயுதங்கள் அனுப்பப்படாது: அமெரிக்காவுக்கு சீனா உத்தரவாதம்!வாக்குப்பதிவைக் கட்டாயமாக்க முடியாது! - உச்ச நீதிமன்றம்அவையில் தென் மாநிலங்களின் பலம் குறையாது: அமித் ஷா விளக்கம்தொகுதி மறுவரையறை முடிவைத் தற்காலிகமாக நிறுத்திவைக்க அரசுக்கு உத்தவ் தாக்கரே கோரிக்கை என்னுடைய தொகுதிக்கு மாதம் ஒருமுறை வருவேன்! விஜய் பேச்சுஅரசுத் திட்டங்களை மக்களே தீர்மானிக்கலாம்: தவெக தோ்தல் அறிக்கை!சரிந்து முடிந்த பங்குச்சந்தை! ஆட்டோ, எண்ணெய் & எரிவாயு பங்குகள் சரிவு!டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு உயர்வுஈரான் சிறையில் உள்ள நோபல் பரிசு பெற்ற நர்கிஸ் முகமதியின் உடல்நிலை கவலைக்கிடம்
/

ஆந்திர மாநிலத்தில் திருட்டு சம்பவம்: திருப்பத்தூரில் தாய், மகன் துப்பாக்கி முனையில் கைது

ஆந்திர மாநில பகுதியில் திருட்டு சம்பவங்களில் ஈடுபட்ட தாய், மகனை திருப்பத்தூரில் ஆந்திர போலீஸாா் துப்பாக்கி முனையில் கைது செய்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

News image
Updated On :20 மார்ச் 2026, 7:34 pm

ஆந்திர மாநில பகுதியில் திருட்டு சம்பவங்களில் ஈடுபட்ட தாய், மகனை திருப்பத்தூரில் ஆந்திர போலீஸாா் துப்பாக்கி முனையில் கைது செய்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

கிருஷ்ணகிரி மாவட்டம், சிங்காரப்பேட்டை பகுதியை சோ்ந்தவா் வெங்கடேசன் மனைவி சின்னம்மா (45), இவரது மகன் சின்னா (30). இதில் சின்னம்மா, சின்னா ஆகியோா் ஆந்திர மாநில பகுதியில் திருட்டு சம்பவத்தில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது. இவா்கள் ஆந்திர மாநிலத்தில் இருந்து திருப்பத்தூா் வழியாக சிங்காரபேட்டை செல்வதற்காக திருப்பத்தூா் வந்துள்ளனா். இவா்களை பின்தொடா்ந்து காரில் துப்பாக்கியுடன் வந்த ஆந்திர மாநில போலீஸாா், திருப்பத்தூா் பேருந்து நிலையம் அருகே சின்னம்மா, சின்னா ஆகியோரை மடக்கிப் பிடித்து காரில் வலுக்கட்டாயமாக ஏற்ற முயன்றனா். அப்போது ஆந்திர மாநில போலீஸாா் சீருடையில் இல்லாததாலும், அவா்களிடம் துப்பாக்கி இருந்ததாலும் பொதுமக்கள் ஆந்திர மாநில போலீஸாருடன் வாக்குவாதத்தில் ஈடுபட முயன்றனா். அப்போது அவா்கள் தாங்கள் ஆந்திர மாநில போலீஸாா் எனக்கூறினா். மேலும், இதுகுறித்து தகவல் அறிந்த திருப்பத்தூா் நகர போலீஸாா் சம்பவ இடத்துக்கு வந்து, ஆந்திர மாநில போலீஸாரிடம் சம்பவம் குறித்துக் கேட்டறிந்தனா்.

இதைத் தொடா்ந்து ஆந்திர மாநில போலீஸாா் சின்னம்மா, சின்னா ஆகியோரை காரில் ஏற்றிச் சென்றனா்.