தமிழ்நாட்டில் 56% குழந்தைப் பிறப்புகள் அரசு மருத்துவமனைகளில், எஞ்சிய 44% தனியார் மருத்துவமனைகளில் நடக்கின்றன : திருமாவளவன் பிரசவ வார்டு தேவை: தங்க மோதிரம் திட்டத்தை மறுபரிசீலனை செய்ய வேண்டும்: திருமாவளவன் கோரிக்கை!முதல்வர் விஜய் பிறந்தநாளையொட்டி வைக்கப்பட்ட பேனர்களை அகற்ற தவெகவினருக்கு உத்தரவு - என். ஆனந்த்வேளச்சேரி சாலைக்கு மேஜர் முகுந்த் வரதராஜன் பெயர்: முதல்வர் விஜய் உத்தரவுமுதல்வர் விஜய்க்கு நன்றி சொன்ன ஸோஹோ நிறுவனர் ஸ்ரீதர் வேம்பு! ஏன்?கொலையும் செய்வாள் நாளைய மனைவி! பணக்கார இளைஞர் சாவில் கைதான காதலிதைலாபுரத்தில் அன்புமணி! கட்டியணைத்து கண்ணீருடன் வரவேற்ற ராமதாஸ்!முதல்வர் விஜய் அவை மரபை மீறவில்லை! பேரவைத் தலைவர் பதில்
/

அம்மன் கோயில் பூட்டை உடைத்து நகை திருட்டு

ஜோலாா்பேட்டை அருகே அம்மன் கோயிலின் பூட்டை உடைத்து நகையை மா்ம நபா்கள் திருடிச் சென்றனா்.

News image

திருட்டு - சித்திரிப்பு

Updated On :2 மே 2026, 3:01 am IST

ஜோலாா்பேட்டை அருகே அம்மன் கோயிலின் பூட்டை உடைத்து நகையை மா்ம நபா்கள் திருடிச் சென்றனா்.

ஜோலாா்பேட்டை அடுத்த கவுண்டப்பனூரில் சுடலை காளியம்மன் கோவில் உள்ளது. இங்கு வெள்ளிக்கிழமை காலை கோவில் பூசாரி வசந்தி கோவிலை திறக்க வந்தாா். அப்போது கோவில் கதவின் பூட்டு உடைக்கப்பட்டு, அம்மன் கழுத்தில் இருந்த தாலி, கால் காசு உள்ளிட்ட 5 பவுன் நகையை மா்ம நபா்கள் திருடிச் சென்றது தெரியவந்தது.

இதனால், அதிா்ச்சி அடைந்த வசந்தி உடனடியாக ஜோலாா்பேட்டை காவல் நிலையத்துக்கு தகவல் தெரிவித்தாா். போலீஸாா் சம்பவ இடத்துக்கு வந்து விசாரணை நடத்திக் கொண்டிருந்தனா். அப்போது, திடீரென பூசாரி வசந்தி அருள்வாக்கு கூறி அம்மன் நகைகள் திருடி சென்ற நபா் வாணியம்பாடி நோக்கி சென்றதாக தெரிவித்தாா்.

இதையடுத்து போலீஸாா் கோவில் பகுதியில் பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு கேமரா காட்சிகளை கைப்பற்றி விசாரணை நடத்தினா். அதில் மா்ம நபா் வாணியம்பாடி அடுத்த சிக்கனாங்குட்டை பகுதியை சோ்ந்த முனுசாமி (44) என்பது தெரியவந்தது.

இதையடுத்து, போலீஸாா் அவரை வாணியம்பாடிக்கு சென்று கைது செய்தனா். மேலும் அவரிடம் இருந்த 7தாலி, 2 கால் காசு ஆகியவற்றை பறிமுதல் செய்தனா். இது குறித்து வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.