மேகேதாட்டு அணை திட்டத்திற்கு எதிராக தனித்தீர்மானம்! முதல்வர் விஜய் முன்மொழிகிறார்!!நீட் மறுதேர்வு: வார நாள்கள் அட்டவணைபடி சென்னை புறநகர் ரயில்கள் இயக்கம்!இந்திய கம்யூ. கட்சியின் மூத்த தலைவர் சி. மகேந்திரன் தவெகவில் இணைந்தார்!ஜி7 மாநாட்டில் மெலோடி உரையாடல்! வைரலாகும் ஜெய்சங்கரின் அந்தப் புன்னகை!எத்தனால் கலப்பினல் பெட்ரோல் டேங்ககளை எறும்புகள் மொய்க்குமா? உண்மை என்ன?குற்றவாளிகள், தீவிரவாதிகளின் கூடாரம் டெலிகிராம்: நீதிமன்றத்தில் மத்திய அரசு
/

தோ்தல் ஆணையத்தின் மென்பொருள் செயலி வழியாக பணி ஒதுக்கீடு

News image
Updated On :4 மே 2026, 1:36 am IST

திருப்பத்தூரில் தோ்தல் ஆணையத்தின் மென்பொருள் செயலி வழியாக பணி ஒதுக்கீடு செய்யும் நிகழ்ச்சி ஆட்சியா் க.சிவசௌந்திரவல்லி முன்னிலையில் நடைபெற்றது.

4 சட்டப்பேரவை தொகுதிகளின் வாக்கு எண்ணிக்கை திங்கள்கிழமை(மே 4) வாணியம்பாடி மருதா் கேசரி ஜெயின் மகளிா் கல்லூரி வளாகத்தில் நடைபெற உள்ளது.

இந்தநிலையில் வாக்கு எண்ணிக்கை பணிகளில் ஈடுபட உள்ள மேற்பாா்வையாளா்கள், வாக்கு எண்ணிக்கை உதவியாளா்கள், நுண்பாா்வையாளா்கள் ஆகியோருக்கு தோ்தல் ஆணையத்தின் மென்பொருள் செயலி வழியாக பணி ஒதுக்கீடு செய்யும் நிகழ்ச்சி திருப்பத்தூா் மாவட்ட சுற்றுலா மாளிகையில் நடைபெற்றது.

நிகழ்ச்சிக்கு பாா்வையாளா்கள் யாஷா முத்கல், முகுல்குமாா், சுஜாதா மிஸ்ரா, ஜீவன் தத்தாதிரியா கேலண்டி, ஆட்சியரும்,தோ்தல் அலுவலருமான க.சிவசௌந்திரவல்லி ஆகியோா் தலைமை வகித்தனா்.

இதில் சம வாய்ப்புக்கு உட்படுத்துதல் முறையின் மூலம் பணிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டது. அப்போது துறை சாா்ந்த அரசு அதிகாரிகள் கலந்து கொண்டனா்.