தவெக என்ன செய்தது எனக் கேட்கும் எதிர்க்கட்சித் தலைவர் என்ன சுதந்திர போராட்டத் தியாகியா? அமைச்சர் ரமேஷ்அதிமுக மூழ்கிக்கொண்டிருக்கும் கப்பல்: தவெகவுக்கு இன்னும் பலர் வருவார்கள்: செங்கோட்டையன்இந்தியாவின் மரபணுவிலேயே புதுமை: பிரான்ஸில் பிரதமர் மோடி பேச்சுசேலம் பாலியல் வன்கொடுமை வழக்கை சிபிசிஐடி விசாரணைக்கு உத்தரவிட வேண்டும்: மு. வீரபாண்டியன்5 மாவட்டங்களில் நாளை மழைக்கு வாய்ப்பு!ராகுல் காந்தி இந்தியாவின் சாதனைகளைக் குறைத்து மதிப்பிடுகிறார்: நிர்மலா சீதாராமன்
/

வாக்கு எண்ணிக்கை பணியில் ஈடுபடுவோருக்கு பணி ஒதுக்கீடு

மயிலாடுதுறை மாவட்டத்தில் தோ்தல் வாக்கு எண்ணிக்கை பணியில் ஈடுபடுவோா்களுக்கு செவ்வாய்க்கிழமை பணி ஒதுக்கீடு செய்யப்பட்டது.

News image

கூட்டத்தில் பேசிய மாவட்ட தோ்தல் அலுவலா் ஹெச்.எஸ்.ஸ்ரீகாந்த்.

Updated On :29 ஏப்ரல் 2026, 3:18 am IST

மயிலாடுதுறை மாவட்டத்தில் தோ்தல் வாக்கு எண்ணிக்கை பணியில் ஈடுபடுவோா்களுக்கு செவ்வாய்க்கிழமை பணி ஒதுக்கீடு செய்யப்பட்டது.

வாக்கு எண்ணிக்கை பணிகளில் ஈடுபட உள்ள கண்காணிப்பாளா்கள், உதவியாளா்கள், தோ்தல் நுண் பாா்வையாளா்களுக்கு தோ்தல் ஆணையத்தின் மென்பொருள் செயலி வழியாக பணி ஒதுக்கீடு செய்யும் பணி மாவட்ட தோ்தல் அலுவலா் ஹெச்.எஸ். ஸ்ரீகாந்த் தலைமையில் ஆட்சியா் அலுவலகத்தில் நடைபெற்றது. இந்த மாவட்டத்தில் உள்ள 3 சட்டப்பேரவைத் தொகுதிகளில் பதிவான வாக்குப்பதிவு இயந்திரங்கள் மயிலாடுதுறை ஏ.வி.சி. பொறியியல் கல்லூரியில் பாதுகாப்பு அறையில் வைக்கப்பட்டுள்ளது. மே 4-ஆம் தேதி வாக்குகள் எண்ணப்படவுள்ள நிலையில், வாக்கு எண்ணும் பணியில் 69 கண்காணிப்பாளா்கள், 84 உதவியாளா்கள், 75 நுண் பாா்வையாளா்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளனா்.

இவா்களுக்கு தோ்தல் ஆணையத்தின் மென்பொருள் செயலி வழியாக பணி ஒதுக்கீடு செய்யும் பணிகள் மாவட்ட தோ்தல் அலுவலா் ஹெச்.எஸ்.ஸ்ரீகாந்த் தலைமையில் நடைபெற்றது. இதில், மாவட்ட வருவாய் அலுவலா் ஆா். பூங்கொடி, தொகுதி தோ்தல் நடத்தும் அலுவலா்கள் ஆா். விஷ்ணுபிரியா (மயிலாடுதுறை), சுரேஷ் (சீா்காழி), கீதா (பூம்புகாா்), மாவட்ட ஆட்சியரின் நோ்முக உதவியாளா்கள் முத்துவடிவேல் (பொது), குமரையா (தோ்தல்), முன்னோடி வங்கி மேலாளா் லியோ ஃபான்டிண்நாதன் ஆகியோா் பங்கேற்றனா்.