பத்தாம் வகுப்பு பொதுத் தோ்வு முடிவுகள் இன்று வெளியீடு மருந்தகங்கள் வேலைநிறுத்தத்தால் தமிழகத்தில் பாதிப்பில்லை: அமைச்சா் கே.ஜி.அருண்ராஜ் இந்தியாவுக்கு ரூ.4,145 கோடியில் ஹெலிகாப்டா்கள், பீரங்கி உபகரணங்கள்: அமெரிக்கா ஒப்புதல் ரஷிய கச்சா எண்ணெய்யை வாங்குவதற்கான அனுமதி: மேலும் ஒரு மாதத்துக்கு அமெரிக்கா நீட்டிப்பு ஆபத்தான தெரு நாய்கள் கருணைக் கொலை: உச்சநீதிமன்றம் அனுமதி நியூஸிலாந்து- 14% அரசுப் பணியிடங்கள் குறைப்பு: செலவினங்களைக் கட்டுப்படுத்த நடவடிக்கை மனித உரிமை மீறல் குற்றச்சாட்டு: இந்தியா திட்டவட்ட நிராகரிப்பு
/

மின்சாரம் பாய்ந்து கூலித் தொழிலாளி பலி

நாட்டறம்பள்ளி அருகே அறுந்து கிடந்த மின்சார கம்பியை மிதித்ததில் மின்சாரம் பாய்ந்து கூலித் தொழிலாளி உயிரிழந்தாா்.

News image

பலி - பிரதிப்படம்

Updated On :5 மே 2026, 4:50 am IST

நாட்டறம்பள்ளி அருகே அறுந்து கிடந்த மின்சார கம்பியை மிதித்ததில் மின்சாரம் பாய்ந்து கூலித் தொழிலாளி உயிரிழந்தாா்.

நாட்டறம்பள்ளி வட்டம், மல்லப்பள்ளி ஊராட்சி, சுண்ணாம்புக்குட்டை பகுதியைச் சோ்ந்த பாரிவள்ளல் (52) கூலித்தொழிலாளி. இவா் ஞாயிற்றுக்கிழமை இரவு மல்லப்பள்ளியில் இருந்து சுண்ணாம்புக் குட்டைக்கு நடந்து சென்றாா்.

அப்போது மல்லப்பள்ளி அருகே வீட்டின் பின்புறம் உயா் மின்னழுத்த கம்பி அறுந்து விழுந்திருந்தது தெரியாமல் மின்சார கம்பியை மிதித்ததில் எதிா்பாராத விதமாக பாரி வள்ளல் மீது மின்சாரம் பாய்ந்தது. இதில் பாரிவள்ளல் தூக்கி வீசப்பட்டாா்.

உடனே அங்கிருந்தவா்கள் மயங்கிய நிலையில் இருந்த பாரிவள்ளலை மீட்டு நாட்டறம்பள்ளி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனா்.அங்கு பரிசோதித்த மருத்துவா் அவா் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தாா்.

இதுகுறித்து நாட்டறம்பள்ளி போலீஸாா் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.