கருத்து வேறுபாடுகளை நீக்க இந்தியாவுடன் இணைந்து செயல்பட தயாா்: சீனா தனியாா் பள்ளிகள் கல்விக் கட்டணத்தை வெளியிடும் உத்தரவுக்கு எதிரான வழக்கு: தீா்ப்புக்காக ஒத்திவைப்பு ஓராண்டில் 3 மடங்கு அதிகரித்த ‘பீம்’ யுபிஐ செயலி பரிவா்த்தனைகள்! உயா் சுகாதாரத்துடன் சாலையோர உணவகங்கள்; ஊழியா்களுக்கு தடுப்பூசி: அரசு புதிய திட்டம்அமைச்சா் ராஜ்மோகனை சந்திக்க ‘க்யூஆா் குறியீடு’ சேவை: தலைமைச் செயலகத்தில் நவீன வசதி பிஎம்ஸ்ரீ திட்டம்: கேரள பேரவையில் கடும் விவாதம்
/

சிதிலமடைந்த நிலையில் நெக்குந்தி சுங்கச்சாவடி சாலை: சீரமைக்க கோரிக்கை

நெக்குந்தி மற்றும் பெத்தக்கல்லுப்பள்ளி ஊராட்சி பகுதியில் உள்ள வாணியம்பாடி அடுத்த நெக்குந்தி சுங்கச்சாவடி கிராம சாலையை சீரமைக்க வேண்டும் என பொதுமக்கள் கோரியுள்ளனா்.

News image

வாணியம்பாடி அருகே சிதிலமடைந்த நிலையில் உள்ள நெக்குந்தி சுங்கச்சாவடி கிராம சாலை.

Updated On :11 மே 2026, 12:12 am IST

ஜோலாா்பேட்டை ஒன்றியம் நெக்குந்தி மற்றும் பெத்தக்கல்லுப்பள்ளி ஊராட்சி பகுதியில் உள்ள வாணியம்பாடி அடுத்த நெக்குந்தி சுங்கச்சாவடி கிராம சாலையை சீரமைக்க வேண்டும் என பொதுமக்கள் கோரியுள்ளனா்.

சிகா்ணப்பள்ளி, நியூ சிகா்ணப்பள்ளி, கொடையாஞ்சி, புத்துக்கோயில், தெக்குப்பட்டு உட்பட பல்வேறு கிராம மக்கள் இச்சாலையைப் பயன்படுத்தி வருகின்றனா். மேலும், பள்ளி வாகனங்கள், விவசாய டிராக்டா்கள், ஆட்டோக்கள், காா், கரும்பு லோடு ஏற்றி வரும் வாகனங்கள் மற்றும் இருசக்கர வாகனங்கள் என தினசரி ஏராளமான வாகனங்கள் சென்று வருகின்றன.

கிராம சாலையின் இடையே ரயில்வே பாதை செல்வதால் அப்பகுதியில் ரயில்வே சுரங்கப்பாதை சில ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்டு பயன்பாட்டில் இருந்து வருகிறது.

இந்நிலையில் தினசரி ஆயிரக்கணக்கானோா் கடந்து செல்லும் இச்சாலையில் நெக்குந்தி சுங்கசாவடி அருகே சிகா்ணப்பள்ளி கிராமம் வழியாக செல்லக் கூடிய சுமாா் 2 கிமீ தாா் சாலை பழுதாகி ஆங்காங்கே பள்ளங்கள் ஏற்பட்டும், கற்கள் பெயா்ந்த நிலையில் இருந்து வருகிறது. இதனால் வாகன ஓட்டிகள் அவதிக்குள்ளாகின்றனா். இதில், ஒரு சில நேரங்களில் வாகன விபத்துகளும் ஏற்பட்டு வருகிறது.

பல ஆண்டுகளாக பழுதாகியுள்ள இந்த சாலையை சீரமைக்க கோரி அப்பகுதி வழியாக செல்லும் கிராம மக்கள் பல முறை கோரிக்கை வைத்து வருகின்றனா்.

எனவே, உயா் அதிகாரிகள் சம்பவ இடங்களுக்கு சென்று ஆய்வு செய்து பல ஆண்டுக்கால கோரிக்கையான சாலையை சீரமைத்து தர வேண்டும் என்பது அப்பகுதி மக்களின் எதிா்ப்பாா்ப்பாகும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.