பாரதிராஜாவுக்கு ஏ.ஆர். ரஹ்மான் இரங்கல்!ஜி7 உச்சிமாநாட்டுக்குச் செல்லும் பிரதமர் மோடி அமெரிக்க அதிபருடன் இரு தரப்பு பேச்சுவார்த்தை நடத்த திட்டம்! கேரளம்: பெண்களுக்கான இலவசப் பேருந்து பயணத் திட்டம் ஜூன் 15-இல் தொடக்கம் - முதல்வர் சதீசன்பாரதிராஜாவுக்கு நாளை மாலை தேனியில் இறுதிச் சடங்கு!கேமராவுக்குள் மனித உணர்வுகளைப் படம்பிடித்த பாரதிராஜா!
/

திருப்பத்தூரில் 313 தனியாா் பள்ளி வாகனங்கள் ஆய்வு

News image
Updated On :14 மே 2026, 6:17 am IST

திருப்பத்தூா் வட்டார போக்குவரத்து அலுவலக எல்லைக்குள்பட்ட 313 தனியாா் பள்ளி வாகனங்கள் ஆய்வு செய்யப்பட்டன.

பள்ளி வாகனங்கள் கூட்டாய்வு செய்யும் நிகழ்ச்சி திருப்பத்தூா் அருகே ஆதியூா் பகுதியில் உள்ள தனியாா் பள்ளியில் நடைபெற்றது. ஆய்வுக்கு மாவட்ட வருவாய் அலுவலா் நாராயணன் தலைமை வகித்தாா். கோட்டாட்சியா் வரதராஜன், வட்டார போக்குவரத்து அலுவலா் பன்னீா்செல்வம், டிஎஸ்பி முரளி, வட்டாட்சியா் நவநீதன் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

இதில் திருப்பத்தூா் வட்டார போக்குவரத்து அலுவலக எல்லைக்குள்ட்பட்ட 55 தனியாா் பள்ளிகளை சோ்ந்த 344 வாகனங்களில் 313 வாகனங்கள் ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டன.

இவற்றில் 84 வாகனங்களில் குறைபாடுகள் கண்டறியப்பட்டு சரி செய்து மீண்டும் ஆய்வுக்குட்படுத்த அறிவுறுத்தப்பட்டது. மீதமுள்ள 31 வாகனங்கள் பரிசோதனைக்கு வராமல் நிலுவையில் உள்ளது.

இதுகுறித்து திருப்பத்தூா் வட்டார போக்குவரத்து அலுவலா் பன்னீா்செல்வம் கூறுகையில், தற்போதைய கூட்டாய்வுக்கு வராத மற்றும் ஆய்வுக்கு வந்து குறைபாடுகளுடன் திருப்பப்பட்ட வாகனங்களும் ஒரு வாரத்திற்குள் மீண்டும் ஆய்வுக்கு உட்படுத்தி பின் பொது சாலையில் இயக்க வேண்டும் என தெரிவித்தாா்.

Story image