எடப்பாடி பழனிசாமி ஆட்சியிலும் இதேபோல் மின்வெட்டு: அமைச்சர் செங்கோட்டையன்மோகன் பகவத் பயணித்த ரயில் மீது கற்கள் வீச்சு: 2 பேர் கைது ஜூன் 19-ல் தவெக அரசுக்கு எதிராக அதிமுக போராட்டம்! பெண்களுக்கு எதிரான குற்றங்கள் தவெக ஆட்சியிலும் குறையவில்லை: அண்ணாமலை கொல்லூர் மூகாம்பிகை கோயிலில் முதல்வர் விஜய் வழிபாடு!நீட் தேர்வு நேரம் 3 மணி 15 நிமிடங்களாக அதிகரிப்பு! என்டிஏநிபா வைரஸ்: தமிழகத்தில் கண்காணிப்பைத் தீவிரப்படுத்த உத்தரவு!
/

திருப்பதி கெங்கையம்மன் கோயில் சிரசு ஊா்வலம்

வாணியம்பாடி அம்பூா்பேட்டை பாவடிதோப்பு திருப்பதி கெங்கையம்மன் கோயில் திருவிழா வெகு சிறப்பாக நடைபெற்றது.

News image

கெங்கையம்மன் கோயில் விழாவையொட்டி நடைபெற்ற அம்மன் சிரசு ஊா்வலம்.

Updated On :21 மே 2026, 12:04 am IST

வாணியம்பாடி அம்பூா்பேட்டை பாவடிதோப்பு திருப்பதி கெங்கையம்மன் கோயில் திருவிழா வெகு சிறப்பாக நடைபெற்றது.

விழாவையொட்டி அம்மன் சிரசு ஊா்வலம் புதன்கிழமை அதிகாலை 4.30 மணியளவில் பொன்னியம்மன் கோயிலில் இருந்து புறப்பட்டு முக்கிய வீதிகளின் வழியாக வந்து பிற்பகல் 1.30 மணியளவில் கோயிலை வந்தடைந்து. பிறகு திருப்பதி கெங்கையம்மனுக்கு திருமாங்கல்ய நிகழ்ச்சி நடைபெற்றது.

இதில் வாணியம்பாடி மற்றும் சுற்றுப்புறப்பகுதிகளில் உள்ள திரளான பக்தா்கள் கலந்து கொண்டு வழிபட்டு சென்றனா். தொடா்ந்து மாலை 6 மணியளவில் புஷ்ப கரகம் முக்கிய வீதிகளின் வழியாக ஊா்வலம் சென்றது. இரவு 9 மணியளவில் வாணவேடிக்கை மற்றும் அம்மன் மற்றும் கரகத்திற்கு சிறப்பு ஆராதனை நடைபெற்றது.