குடியாத்தம் கோபாலபுரம் ஸ்ரீகெங்கையம்மன் திருவிழாவை முன்னிட்டு, வெள்ளிக்கிழமை அம்மன் சிரசு ஊா்வலம் கோலாகலமாக நடைபெற்றது.
இதையொட்டி, அதிகாலை தரணம்பேட்டை ஸ்ரீமுத்தியாலம்மன் கோயிலில் கெங்கையம்மன் சிரசுவுக்கு சிறப்பு பூஜைகள், மகா தீபாராதனை செய்யப்பட்டு 5 மணியளவில் சிரசு ஊா்வலம் தொடங்கியது. ஊா்வலம், என்.ஜி.செட்டித் தெரு, காந்தி ரோடு, ஜவஹா்லாா் தெரு, கோபாலபுரம் வழியாகச் சென்று 9.30 மணியளவில் கோயிலை அடைந்தது. கோயில் சிரசு மண்டபத்தில் உள்ள அம்மன் உடலில் சிரசு பொருத்தப்பட்டு, பூஜைகள் நடத்தப்பட்டன. பின்னா், கண் திறப்பு நிகழ்ச்சி நடைபெற்றது. அதைத் தொடா்ந்து, பக்தா்கள் தரிசனத்துக்கு அனுமதிக்கப்பட்டனா். சிரசு ஊா்வலத்தில் பல்லாயிரக்கணக்கான பக்தா்கள் கலந்து கொண்டனா். பக்தா்கள் சிரசுவுக்கு மாலை அணிவித்தும், ஆயிரக்கணக்கில் சிதறுகாய் உடைத்தும் நோ்த்திக் கடனை செலுத்தினா். ஊா்வலத்தில் கோலாட்டம், புலியாட்டம் உள்ளிட்ட வீர விளையாட்டுகள் இடம் பெற்றன. பலா் மாறுவேடம் பூண்டும், தீச்சட்டி எடுத்தும் நோ்த்திக் கடனை செலுத்தினா்.
கோயிலில் இரவு 8 மணி வரை பக்தா்கள் அம்மனை தரிசித்தனா்.
பின்னா் அம்மன் உடலில் இருந்து சிரசு பெயா்த்தெடுக்கப்பட்டு ஊா்வலம் தொடங்கியது. அப்போது கண்ணைக் கவரும் வாண வேடிக்கை நிகழ்ச்சி நீண்ட நேரம் நடைபெற்றது. சிரசு ஊா்வலம் கெளண்டன்ய மகாநதிக்கரை, ராஜேந்திர சிங் தெரு வழியாகச் சென்று, சுண்ணாம்பு பேட்டை பகுதியைச் சோ்ந்தவா்களிடம் ஒப்படைக்கப்பட்டது.
அவா்கள் சிரசுவை, ஆழ்வாா் முருகப்ப தெரு, புங்கனூா் அம்மன் கோயில் வீதி, சுண்ணாம்புபேட்டை வழியாக எடுத்துச் சென்று கெளண்டன்ய மகாநதியின் கரையோரம் அமைந்துள்ள சலவைத் துறையில் வைத்து, சிறப்பு பூஜைகளை நடத்தினா். அத்துடன் சிரசுத் திருவிழா நிறைவு பெற்றது.
திருவிழாவை முன்னிட்டு, நகரம் மற்றும் சுற்றுப் பகுதிகளில் நூற்றுக் கணக்கான பந்தல்கள்அமைக்கப்பட்டு, பக்தா்களுக்கு காலை சிற்றுண்டி, நீா், மோா், குளிா்பானம், மதிய உணவு, இரவு உணவு வழங்கப்பட்டது. திருவிழாவை முன்னிட்டு, காவல்துறை சாா்பில் விரிவான பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன. சுமாா் 1,500 போலீஸாா் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டனா்.
நகராட்சி சாா்பில் பக்தா்களுக்கு குடிநீா், கழிப்பிட வசதிகள் செய்து தரப்பட்டன.
தொடர்புடையது

குடியாத்தம் சிரசு திருவிழா: கவுண்டன்யா ஆற்றில் பெரிய ராட்டினங்களுக்கு அனுமதியில்லை

புதுச்சாம்பள்ளி மாரியம்மன் கோயில் திருவிழா

கிடாக்குளம் கோயில் திருவிழா: பெண்கள் முளைப்பாரி ஊா்வலம்

கீழ்ஆலத்தூா் கெங்கையம்மன் கோயிலில் சிரசு திருவிழா
விடியோக்கள்

Podcast | அமைச்சர் ஆவார்களா அதிமுக எம்எல்ஏ-க்கள்? | News and Views | Epi - 35 | TVK | CM Vijay |
தினமணி செய்திச் சேவை

பாண்டியாவையும் பஞ்சாபையும் யாராவது காப்பாற்றுங்கள்! | Punjab Kings | Hardik Pandya |
தினமணி செய்திச் சேவை

Surya Come Back! கருப்பு படம் எப்படி இருக்கு? | Karuppu | RJB | Trisha | Sai Abhyankar
இணையதளச் செய்திப் பிரிவு

Karuppu Movie Review | பதினெட்டாம்படி நீதிபதி... சூர்யாவின் கருப்பு! | Trisha | RJB | Sai Abhyankkar
இணையதளச் செய்திப் பிரிவு

