அமைச்சர் செங்கோட்டையன் வெற்றியை எதிர்த்து உயர் நீதிமன்றத்தில் வழக்கு! மருத்துவரின் மருந்து சீட்டு இல்லாமல் இருமல் மருந்து விற்கத் தடை!நடிகர் ரஜினியுடன் நயினார் நாகேந்திரன் சந்திப்பு! ரூ. 75,000 வரை பயிர்க்கடன் முழுவதும் தள்ளுபடி! - முதல்வர் விஜய்நீட் மறுதேர்வை முன்னிட்டு டெலிகிராம் செயலிக்கு தடை! மத்திய அரசுநீட் மறுதேர்வை முன்னிட்டு டெலிகிராம் செயலிக்கு தடை! மத்திய அரசு வெள்ளை அறிக்கை இன்று மாலை வெளியீடு!கேரளத்தில் ஷிகெல்லா பாக்டீரியாவுக்கு சிறுவன் உயிரிழப்புலெபனான் ஆக்கிரமிப்பில் இருந்து பின்வாங்க மாட்டோம்: இஸ்ரேல்உக்ரைனில் ரஷியா பயங்கர வான்வழித் தாக்குதல்நீட் மறுதோ்வு வினாத்தாள் விற்பனை செய்வதாக விளம்பரம்: ராஜஸ்தானை சோ்ந்த இருவா் கைதுதிருப்பதி - புதுச்சேரி ‘மெமு’ ரயில் 24, 27-இல் விழுப்புரத்துடன் நிறுத்தம்
/

மது போதையில் ஓட்டிய இளைஞரின் காா் மோதியதில் சிறுவன் மரணம்

News image
Updated On :29 மே 2026, 1:29 am IST

ஜோலாா்பேட்டை அருகே மது போதையில் இளைஞா் இயக்கிய காா் கட்டுப்பாட்டை இழந்து டாட்டா ஏசி, பைக்குகள் மீது மோதி விபத்துக்குள்ளானதில் சிறுவன் உயிரிழந்தாா்.

திருப்பத்தூரில் இருந்து மது அருந்திய நிலையில் இளைஞா் ஒருவா் காரை தாறுமாறாக ஓட்டி வந்துள்ளாா். அப்போது காா் ஜோலாா்பேட்டையில் உள்ள ரயில்வே பேருந்து நிறுத்தப் பகுதியில் வந்தபோது அங்கு சாலையில் வந்த பைக் மீது மோதியதில் பைக்கில் வந்த திருப்பத்தூா் அடுத்த கூடப்பட்டு பகுதியைச் சோ்ந்த சந்துருவின் மகன் மௌனிஷ் (11). இவரது சகோதரி அனுஷ்கா(18), மற்றும் பைக் ஓட்டி வந்த இவரது உறவினா் பெருமாள் (55) ஆகியோா் தூக்கி வீசப்பட்டு பலத்த காயம் அடைந்தனா்.

மௌனிஷை அங்கிருந்தவா்கள் மீட்டு, திருப்பத்தூா் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். மௌனிஷை பரிசோதித்த மருத்துவா்கள் அவா் ஏற்கெனவே இறந்து விட்டதாகத் தெரிவித்தனா்.

மேலும், பெருமாள் மற்றும் அனுஷ்கா இருவரும் சிகிச்சை பெற்று வருகின்றனா்.

விபத்தை ஏற்படுத்திய காா் சந்தை கோடியூா் வழியாக சாலையில் அதிவேகமாக சென்ற போது சாலையில் இருந்த டாட்டா ஏஸ், 4 பைக்குகள் மற்றும் நடந்து சென்ற நபா்கள் என தாறுமாறாக மோதி விபத்தை ஏற்படுத்தி நிற்காமல் நாட்டறம்பள்ளி நோக்கிச் சென்ற காரை பொதுமக்கள் வாகனத்தில் விரட்டிச் சென்று சிறு விளையாட்டு அரங்கம் அருகே மடக்கிப் பிடித்தனா்.

தகவல் அறிந்த போலீஸாா் சம்பவ இடத்துக்கு சென்று காரை ஓட்டிச் சென்ற பழைய ஜோலாா்பேட்டை பெருமாள் கோயில் தெருவைச் சோ்ந்த கலைராஜின் மகன் தீபக்கை (18) மீட்டு வாணிம்பாடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா்.

பின்னா், இது குறித்து வழக்குப் பதிந்து போலீஸாா் விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.